என்னை ஜெயிக்க விஜயகாந்தால மட்டும்தான் முடியும்.... ஒத்துக்கொண்ட ரஜினி...
தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதும் வசூலில் முடிசூடா மன்னனாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அதனால்தான் அவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம். ரஜினி பட ரிலீஸ் என்றாலே ரஜினி ரசிகர்களுக்கு அது திருவிழாதான். இப்போதும் இந்த நிலை தொடர்கிறது.
அதேநேரம், ரஜினியின் பல படங்களின் வசூலை விஜயகாந்த் படங்கள் முறியடித்தது என்று சொன்னால் நம்பூவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. இதை ரஜினியே ஒருமுறை ஒப்புக்கொண்டார்.
ரஜினிக்கு ஏ மற்றும் பி செண்ட்டரில் ரசிகர்கள் அதிகம். எனவே, அவரின் படங்கள் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் (சிட்டி) அதிக வசூல் படைக்கும். விஜயகாந்துக்கு பி மற்றும் சி எனப்படும் நகரம் மற்றும் கிராம புறங்களில் அவரின் திரைப்படங்கள் வசூலை வாரி குவிக்கும்.
ரஜினியின் பணக்காரன் திரைப்படமும் விஜயகாந்தின் புலன் விசாரணை படமும் ஒன்றாக வெளியானது. இதில், புலன் விசாரணை திரைப்படம் பி மற்றும் சி செண்டர்களில் அதிக வசூலை பெற்றது. பணக்காரன் திரைப்படம் ஏ மற்றும் பி செண்டர்களில் சிட்டி பகுதியில் வசூலை பெற்றது.
ஒருமுறை ராமராஜன் பீக்கில் இருந்த நேரத்தில் அவரின் படமும், ரஜினியின் படமும் ஒன்றாக வெளியானது. பி மற்றும் சி செண்டரில் முதல் நாள் வசூல் ரஜினி படத்தை விட ராமராஜன் படத்திற்கு அதிகமாக வசூலாகியுள்ளது. இதை சிலர் ரஜினியிடமே கூறியுள்ளனர். இதற்கு பதில் சொன்ன ரஜினி ‘இது எல்லாம் சும்மா.. இது தற்காலிகமானதுதான்.. என் வசூலை ராமராஜனால் அடிக்க முடியாது. பி மற்றும் சி செண்டர்களில் என் படங்களை விட அதிக வசூல் பெறுவது விஜயகாந்த் படங்கள் மட்டுமே’ எனக் கூறியுள்ளார்.