விஜயகுமாரின் நடிப்பை பார்த்து மிரண்ட ரஜினி!.. ‘ நாட்டாமை’ படம் பார்த்து ரஜினி எடுத்த தேவையில்லாத முடிவு..

by Rohini |
rajini_main_cine
X

rajini vijayakumar

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இவரின் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட். மேலும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் அறிமுகம் மற்ற இயக்குனர்களை அண்ணாந்து பார்க்க வைத்தது.

rajini1

vijayakumar

குடும்ப பாங்கான படங்களை எடுப்பதில் வல்லவரான கே.எஸ்.ரவிக்குமார் 1990 ஆம் ஆண்டும் வெளிவந்த புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு சேரன் பாண்டியன், முத்து, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், ஊர்மரியாதை , நாட்டாமை போன்ற பெரிய ஹிட் படங்களை கொடுத்தார்.

இதையும் படிங்க : துணிவு படத்தின் மூலம் நெருக்கமான அஜித்-அமீர்!.. பம்பர் ஆஃபரை கொடுத்து அசத்திய நம்ம தல!..

இவரின் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான நாட்டாமை படம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் பெரிய பெரிய ஜாம்பவான் நடிகர்கள் நடித்து படத்தை வெற்றியின் உச்சத்திற்கே கொண்டு சென்றனர். சரத்குமார், விஜயகுமார், குஷ்பு, மனோரமா, மீனா, கபாலி போன்ற எண்ணற்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

rajini2

vijaykumar

படத்தின் வெற்றிக்கு விஜயகுமாரின் நடிப்பும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்தது. ஃப்ளாஸ் பேக்கில் நாட்டாமையாக வரும் விஜயகுமாரின் நடிப்பை பார்த்து ரஜினியே மிரண்டிருக்கிறாராம். நாட்டாமை படத்தில் விஜயகுமாரின் கதாபாத்திரம் ரஜினியை மிகவும் ஈர்த்திருக்கிறது.

அதன் காரணமாகவே நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பெத்தராயுடு’ படத்தில் நாட்டாமை விஜயகுமாரின் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இது எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் விஜயகுமாரின் மானரிசமும் ரஜினியின் மானரிசமும் ஒன்று போல் இருக்காது. ஆகவே தெலுங்கில் ரஜினியின் ஸ்டைலில் நாட்டாமையாக நடித்திருப்பார்.

rajini3

rajini3

1995 ஆம் ஆண்டு தெலுங்கு ரீமேக்கில் வெளியான நாட்டாமை படத்தால் ரஜினிக்கு ஒரு வித விமர்சனங்களும் வந்திருக்கிறது. ஏனெனில் அந்த சமயத்தில் பாட்ஷா, அண்ணாமலை போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்த ரஜினி திடீரென இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது தமிழக மக்கள் மத்தியில் ஒரு அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தது.

Next Story