ஊதியமா...? விருதா...? ரஜினிக்கு செக் வைக்கும் வைரமுத்து...!

by Rohini |
rajini_main_cine
X

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 80களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் இன்று வரை எந்த வொரு மாற்றமும் இல்லாமல் அதே உத்வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

rajini1_cine

தன் துள்ளலான நடிப்புடன் அதே ஸ்டைலுடன் மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் ரஜினியும் முதலில் இருக்கிறார். கோடிக் கணக்கில் அள்ளிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய கவிதையாக ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ படமாக்கப்பட்டால் அந்த கதையில் ரஜினி நடித்தால் கண்டிப்பாக விருதுகள் உறுதி என குறிப்பிட்டுள்ளார்.

rajini2_cine

வைகை அணை கட்டப்பட்ட போது அங்கு இருந்த 14 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அப்போது அந்த கிராம மக்கள் நடத்திய போராட்டம் பற்றிய கதைதான் இந்த கள்ளிக்காட்டு இதிகாசமாகும்.

rajini3_cine

இந்த கதையில் பேயத்தேவர் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேல் விற்பனையாகி உள்ள இந்த கள்ளிக்காட்டு இதிகாசம் ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. அதுமட்டுமன்றி 2003 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதும் இந்த புத்தகத்திற்காக வைரமுத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே ரஜினி ஊதியத்தை எதிர்பார்க்காமல் இந்த கதையில் நடித்தால் அவருக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைக்கும் என்பது உண்மை.

Next Story