Categories: latest news

அப்போ அம்மா…இப்போ பொண்ணு…. இரண்டு தலைமுறை நடிகைகளுடன் நடித்த ரஜினி…..

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரே ஒரு நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே. 1975ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது திரைவாழ்க்கையை தொடங்கியவர் தான் ரஜினிகாந்த்.

அதன் பின்னர் படிப்படியாக தனது சொந்த திறமை மூலம் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ஒரு இடைவெளிக்கு பின்னர் ரஜினி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கேற்ப ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக சமீபத்தில் அண்ணாத்த படத்தின் அண்ணாத்த அண்ணாத்த பாடல் மற்றும் சாரா காற்றே பாடல் என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, குஷ்பு, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ரஜினி கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவுடன் நடித்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். அதாவது கடந்த 1981ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மேனகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ரசிகர்கள் 1981ஆம் ஆண்டு அம்மா உடன் நடித்த ரஜினி தற்போது 2021ஆம் ஆண்டு அண்ணாத்த படத்தில் மகளுடன் நடித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். அதுவும் உண்மை தான் பல ஆண்டுகளாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஜினி அனைத்து தலைமுறை நடிகைகளுடனும் நடித்து விட்டார். அந்த வகையில் இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல என்று தான் கூற வேண்டும்.

Published by
adminram