சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்து கொடுத்த படம்... அதுவும் சூப்பர் ஹிட்டாம்...
தன்னை உயர்த்தி விட்டவர்களை மறந்து விடாமல் இருப்பவர் ரஜினிகாந்த். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு படத்தில் அவர் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார். அந்த படமும் சூப்பர் ஹிட் என்பது தெரியுமா?
ரஜினிகாந்த் நாயகனாக நடித்த முதல் படம் பைரவி. இப்படத்தினை தயாரித்த கலைஞானம் சாண்டோ சின்னப்ப தேவர் பைனான்ஸ் உதவி செய்வதாக இருந்தது. ஆனால் சின்னப்ப தேவர் சிறு வேடங்களில் நடித்து வந்த ரஜினியை வைத்து இந்த படத்தினை தயாரித்தால் தனது பணம் கேள்விக்குறியாகும் என நினைத்தார். இருந்தும் கலைஞானம் ரஜினி மீது நம்பிக்கை வைத்து தேவரை சம்மதிக்க வைத்து பைரவி படத்தினை தொடர்ந்து தயாரித்தார்.
எல்லா தடைகளை முடித்து பைரவி திரைக்கு வந்து வெற்றி நடைபோட்டது. படத்தினை பார்த்த சின்னப்ப தேவரும் அசந்து விட்டார். இதனால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ரஜினியை வைத்து தயாரிக்க சின்னப்ப தேவர் விரும்பினார். தேவர் தயாரிப்பில் ரஜினி நடித்த முதல் திரைப்படம் தாய் மீது சத்தியம்.
தொடர்ச்சியாக சின்னப்ப தேவரை ரஜினியை வைத்து தனது நிறுவன சார்பில் படங்களை தயாரித்து வந்தார். தேவரின் மருமகன் அப்படங்களை ஆர்.தியாகராஜன் இயக்கி வந்தார். அன்னை ஓர் ஆலயம், அன்புக்கு நான் அடிமை, ரங்கா, தாய் வீடு ஆகியவை தியாகராஜன் இயக்கத்தில், தண்டாயுதபாணி பிலிம்ஸுக்காக ரஜினி நடித்தப் படங்கள். எல்லா படங்களுமே செம ஹிட் லிஸ்டில் இருந்தது. 1985ல் தாய் வீடு படத்தின் போது ரஜினிக்கும், இயக்குனர் தியாகராஜனுக்கும் பிரச்சனை உருவானது. இதனால் அதுவே இந்த கூட்டணியின் கடைசி படமாக அமைந்தது.
அதன்பிறகு தேவர் நிறுவனத்தில் வெளிவந்த எல்லா படங்களும் படுத்தோல்வியை தழுவியது. இதனால் அந்த நிறுவனம் பெரும் கடனை சுமந்தது. இது ரஜினி காதுக்கு வந்தது. அதனால் ஒரு படத்தினை இலவசமாக நடித்துக்கொடுக்க ரஜினி முன்வந்தார். அதன்படி ரஜினி நடிப்பில் தர்மத்தின் தலைவன் உருவானது. பிரபு, சுஹாசினி ஆகியோர் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தனர். படமும் சூப்பர்ஹிட் ஆனது. சின்னப்ப தேவர் நிறுவனமும் கடனில் இருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.