இயக்குனருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த ரஜினிகாந்த்!… அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..

Published on: March 12, 2024
rajinikanth
---Advertisement---

திரையுலகை பொறுத்தவரை ஒரு ஹீரோவாக உருவாக்குவது ஒரு இயக்குனர்தான். ஒரு ஸ்டாருக்கு பின்னால் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால், ரசிகர்களோ நடிகர்களை மட்டுமே பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் உருவானதற்கு பின்னால் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

இயக்குனர் இல்லாமல் ஒரு நடிகர் ஸ்டார் ஆக முடியாது. கே.பாலச்சந்தர் ரஜினியை அறிமுகம் செய்யாமல் போயிருந்தார். ரஜினி சினிமாவில் இருந்திருப்பாரா? இல்லை சூப்பர்ஸ்டார் ஆகியிருப்பாரா என்பதும் தெரியாது. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அதன்பின் வில்லன் நடிகராக மாறினார் ரஜினி.

இதையும் படிங்க: ஜெயிலர் 2வா?.. உருட்டுருவன் ஆயிரம் உருட்டுவான்.. ரஜினி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நெல்சன்!..

பைரவி என்கிற படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானம்தான் அப்படத்தின் தயாரிப்பாளர். ரஜினியை ஹீரோவாக பார்த்த முதல் தயாரிப்பாளர் இவர்தான். அதனால்தான் சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி கொடுத்தார் ரஜினி.

ரஜினியை ஹீரோவாக மாற்றியது கலைஞானம் எனில், அவரை ஸ்டாராக மாற்றியது எஸ்.பி.முத்துராமன்தான். அவரின் இயக்கத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ரஜினி. ஒருமாதிரி கலைப்படங்களில் நடித்து வந்த ரஜினியை ஜனரஞ்சக கதைகளில் நடிக்க வைத்து ரசிகர்களிடம் பிரபலமாக்கியவர் எஸ்.பி.முத்துராமன்தான்.

இதையும் படிங்க: ஒரு சீனுக்கு இவ்வளவு வசனமா?!.. ஆள விடுங்க!.. படப்பிடிப்பிலிருந்து மாயமான ரஜினி…

எஸ்.பி.முத்துராமனிடம் 12 பேர் கொண்ட ஒரு குழு வேலை செய்து வந்தது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அவர்கள் தொடர்ந்து எஸ்.பி. முத்துரமானின் படங்களில் வேலை செய்து வந்தார்கள். ரஜினி பெரிய ஸ்டார் ஆகி மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்தபோது அவரை சந்தித்த எஸ்.பி.முத்துராமன் தன் டீமில் இருப்பவர்கள் இப்போது படங்களின்றி கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு நீ உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உடனே எஸ்.பி.முத்துராமனின் சொந்த தயாரிப்பில் சம்பளம் இல்லாமல் ஒரு படத்தில் நடிப்பது என ரஜினி முடிவு செய்தார். அப்படி உருவான திரைப்படம்தான் பாண்டியன். 1992ம் வருடம் அக்டோபர் மாதம் இப்படம் வெளியானது. இந்த படத்தை முகவும் குறைவான பட்ஜெட்டில் எடுத்து அந்த லாபத்தை தன்னுடன் வேலை செய்தவர்களுக்கு பிரித்து கொடுத்தார் எஸ்.பி.முத்துராமன்.

இதையும் படிங்க:: ரஜினியின் புகழை சொன்ன வைரமுத்துவின் பாடல்கள்! இந்த பாடல்கள் மட்டும் இல்லைனா தலைவரின் நிலைமை?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.