Cinema News
நெல்சனுக்கு ஏற்பட்ட அவமானம்!.. ரஜினி சொன்ன வார்த்தை!.. அதனாலதான் அவர் சூப்பர்ஸ்டார்!..
திரையுலகை பொறுத்தவரை நடிகரானாலும் சரி, இயக்குனரானாலும் சரி. வெற்றியை கொடுத்தால் மட்டுமே வரவேற்பும், மரியாதையும் கிடைக்கும். அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும். தயாரிப்பாளர்கள் தேடி வருவார்கள். இல்லையேல் அவமானமே மிஞ்சும். இதற்கு ஒரு முக்கிய உதாரணம் நெல்சனுக்கு சமீபத்தில் நடந்த அவமானம்.
கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் விஜயை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. மேலும், இந்த படத்தின் திரைக்கதை நன்றாகவே இல்லை என நெட்டிசன்கள் இவரை சமூகவலைத்தளங்களில் கடுமையாக கிண்டலடித்தனர். ஆனாலும், ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரஜினியை வைத்து தற்போது ஜெயிலர் திரைப்படத்த இயக்கி வருகிறார். இந்த படத்தை எப்படியாவது மாபெரும் வெற்றிப்படமாக்க வேண்டும் என நினைக்கும் நெல்சன் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். பல மொழி நடிகர்களை உள்ளே கொண்டு வந்து பேன் இண்டியா படமாக மாற்றிவிட்டார்.
சமீபத்தில் விகடன் விருது விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கலந்து கொள்ள லோகேஷ் கனகராஜ் வந்த போது அவர் காரிலிருந்து இறங்குவது முதல் மேடையில் அமரும் வரை அவரை வரவேற்று பவுன்சர்கள் புடை சூழ அவரை உள்ளே அழைத்து சென்றனர். ஆனால், நெல்சன் வந்த போது ஒருவர் கூட அவரை வரவேற்கவில்லை. அவராக சென்று ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார். இதற்கு சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனமும் தெரிவித்திருந்தனர். ஒரு படம் தோல்வி அடைந்தால் மதிக்க மாட்டீர்களா என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரஜினி நெல்சனிடம் ‘கண்ணா நான் இந்த மாதிரி பல அவமானங்களை பாத்திருக்கேன். இங்க அப்படித்தான். என்னை ஒழிக்க பல பேர் முயற்சி செய்தனர். பல வகைகளிலும் அவமானப்படுத்தினார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டிதான் வந்திருக்கேன். உங்க திறமையை பயன்படுத்தி ஜெயிலர் படத்தை வெற்றிப்படமா கொடுங்க. எல்லாம் மாறும்’ என்கிற ரீதியில் பேச கண்கலங்கி நெகிழ்ந்து போனாராம் நெல்சன்.
பீஸ்ட் படம் தோல்வி என்றதும் நெல்சனை மாற்றிவிட்டு வேறு இயக்குனரை போடலாமா என சன் பிக்சர்ஸ் நிறுவனம் யோசித்தது. இதை அறிந்த ரஜினி ‘ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டால் அவருக்கு திறமை இல்லையா?.. இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இயக்குனரை மாற்ற வேண்டாம். அவரே இயக்கட்டும்’ என நெல்சனுக்காக பேசியவர் ரஜினிதான்.
அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டார்!.