மொட்டைமாடியில் தூங்க முடிவெடுத்த ரஜினி… அரண்டுபோன இயக்குனர்… எளிமைன்னா இதுதான்…

Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் உலகம் போற்றும் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், எப்போதும் அவரது எளிமை நம்மை வியக்க வைக்கும். ரஜினிகாந்த் ஒரு மிகச்சிறந்த ஆன்மீகவாதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு காலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இமயமலைக்குச் செல்வார் ரஜினிகாந்த். அங்கே அவர் பயணித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்க்க வியப்பாக இருக்கும்.
ரோட்டின் ஓரத்தில் மரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருப்பார். சாதாரணமாக மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிடுவார். அவரது உடை மிகவும் எளிமையாக இருக்கும். சில நேரம் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாது. இவரது எளிமையை பற்றி கூறாத சினிமா ஆட்களே கிடையாது.

Rajinikanth
இந்த நிலையில் ஒரு நாள் ரஜினிகாந்த் தனது படப்பிடிப்புக் குழுவினருடன் மொட்டை மாடியில் தூங்கியிருக்கிறார் என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா?
1977 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சிவக்குமார், சுமித்ரா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “புவனா ஒரு கேள்விக்குறி”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தடா பகுதியில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டது. அக்காட்சிகளை ஒரு நாளில் முடித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் எஸ் பி முத்துராமன். ஆனால் அப்படி ஒரே நாளில் எடுக்க முடியவில்லை.

Rajinikanth
படப்பிடிப்பிற்காக வந்த பலரும் சென்னை போய்விட்டு அடுத்தநாள் திரும்பிவரவேண்டும். இத்தனை பேர் சென்னைக்கு போய்விட்டு நாளை வரவேண்டும் என்பது சரியாக இருக்காது என நினைத்த இயக்குனர், ரஜினியை மட்டும் சென்னைக்கு அனுப்பிவிட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டைமாடியில் படக்குழுவை இரவு தங்கவைத்துவிடலாம் என நினைத்திருக்கிறார். மேலும் அங்கு இருக்கும் சிறிய தேநீர் கடையில் எதாவது உணவு வாங்கிக்கொள்ளலாம் எனவும் முடிவு செய்திருக்கிறார்.
இதனை ரஜினிகாந்திடம் கூறியுள்ளார் முத்துராமன். அதற்கு ரஜினிகாந்த் “நீங்கள் அனைவரும் இங்கு தங்கும்போது, நான் மட்டும் சென்னை போய்விட்டு திரும்பவேண்டுமா?. அதெல்லாம் வேண்டாம். நீங்கள் எந்த மொட்டை மாடியில் தங்குகிறீர்களோ அங்கேயே நானும் தூங்கிக்கொள்கிறேன். எந்த தேநீர் கடையில் உங்களுக்கு உணவு கிடைக்கிறதோ அதையே நானும் சாப்பிட்டுக்கொள்கிறேன்” என கூறி அவர்களுடன் அன்று இரவு மொட்டைமாடியில் ஒரு ஓரத்தில் படுத்து தூங்கி இருக்கிறார். ரஜினிகாந்திடம் அன்று இருந்த எளிமை இப்போதும் அப்படியே இருப்பதாக அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.