இது முதல் தடவை இல்லை.! ஏற்கனவே ஒன்னு முடிஞ்சிருச்சு.! பகீர் கிளப்பிய ரஜினி தரப்பு.!

by Manikandan |
இது முதல் தடவை இல்லை.! ஏற்கனவே ஒன்னு முடிஞ்சிருச்சு.! பகீர் கிளப்பிய ரஜினி தரப்பு.!
X

அண்ணாத்த திரைப்படத்தின் ரிசல்ட்டை அடுத்து, ரஜினிகாந்த் வெகு நாட்களாக அடுத்து யார் படத்தில் நடிக்க உள்ளார் என்கிற விவரத்தை அறிவிக்காமல் இருந்து வந்தார். கடைசியாக நெல்சன் இயக்கத்தில் தனது 169வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் பல இளம் இயக்குனர்களிடம் கதையை கேட்டு கடைசியில் நெல்சனை ரஜினி டிக் செய்துள்ளார். மேலும் சில இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டுள்ளார். அதில் அருண்ராஜா காமராஜ் பெயரும் அடிபட்டது.

இதையும் படியுங்களேன் - சிம்பு செய்யும் வேலைக்காக நான் காத்திருக்க மாட்டேன்.! கடுப்பாகிய சென்சேஷனல் இயக்குனர்.!

அப்படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்கிற செய்தி பரவியதும், போனிகபூர் உடனே மறுப்பு தெரிவித்து டிவீட் செய்துவிட்டார். ஆனால், ரசிகர்கள் கண்ணில் இந்த சந்திப்பு படும் முன்னரே, இந்த சந்திப்பு ஏற்கனவே ஒரு முறை நடைபெற்றுள்ளதாம்.

அதனால், கண்டிப்பாக ரஜினி - போனிகபூர் - அருண்ராஜா காமராஜ் கூட்டணி நிச்சயம் நடைபெறும். அதன் அறிவிப்பு நெல்சன் பட ஷூட்டிங் நிறைவு அடைந்த பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story