வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான?.. ரஜினியை ஓரங்கட்டிய பாலிவுட் சினிமா!.. என்ன நடந்தது தெரியுமா?..

Published on: March 22, 2023
rajini
---Advertisement---

தமிழ் சினிமாவில் 80களில் மிகவும் கோலோச்சிய நடிகர்களாக வலம் வந்தவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். சினிமாவில் ரஜினிக்கு கமல் சீனியர் என்றாலும் சினிமாவில் வந்த ஒரு சில காலங்களில் தன்னுடைய ஆதிக்கத்தை
நிறுவினார் ரஜினிகாந்த். இதன் விளைவு கமலை பாலிவுட்டில் களமிறக்கி அங்கேயும் ஒரு சிறந்த நடிகராக்க வேண்டும் என பாலசந்தர் விரும்பினார்.

rajini1
rajini1

அதன் காரணமாகவே கமல் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார். அப்போதைய பத்திரிக்கைகள் ரஜினியை மட்டும் பாலசந்தர் கைவிட்டார் என்றும் எழுதினார்கள். அதற்கு காரணமாக ஒரு சம்பவமும் நடந்திருக்கிறதாம். ரஜினி தமிழில் அறிமுகமான அபூர்வ ராகங்கள் படம் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்ட பாலசந்தரிடம் ரஜினி ‘தமிழில் நான் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியிலும் நானே நடிக்கிறேன்’ என்று கூறினாராம்.

ஆனால் பாலசந்தர் தான் ரஜினியை நிராகரித்து விட்டாராம். அதன் பிறகு பாலிவுட்டில் ரஜினி நுழைய காரணமாக
இருந்தது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன். ஏனெனில் 80களில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பல ஹிட் படங்கள் ஹிந்தியில் அமிதாப் நடித்த படங்கள் தானாம். அதன் காரணமாகவே ரஜினி மீது அமிதாப்பிற்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டாம்.

rajini2
rajini2

இதனால் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து எடுக்க விஜய்காந்த் கேரக்டரில் ரஜினி ஹிந்தியில் நடித்து படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் ஹிந்தியில் நுழையும் போது ரஜினி ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். அதாவது ஒரு மதராசி ஒருவர் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்துவதா என்றெல்லாம் பேசியிருக்கின்றனர். அப்போது ரஜினிக்கு உதவியாக இருந்தவர் அமிதாப் தானாம்.

இந்த படத்தை தொடர்ந்து கங்குவா என்ற படத்திலும் நடித்தாராம் ரஜினி. அது ‘மலையார் மம்பட்டியான்’ படத்தின் ரீமேக். ஹிந்தியில் அந்த படமும் ஹிட். ஆகவே கங்குவா படத்தின் வெற்றிவிழாவிற்கு அனைவரும் வருகை தர மேடையில் ரஜினி பேசினாராம். பேசும் போது மனதில் பட்டதை அப்படியே பேசியிருக்கிறார். ‘ நான் வரும் போது அனைவரும் நல்ல வரவேற்பை கொடுத்தார்கள், ஆனால் ஸ்டண்ட் மாஸ்டர்களும் ஸ்டண்ட் கலைஞர்களும் தான் என்னை தீவிரமாக விமர்சனம் செய்தார்கள்,

rajini3
rajini3

அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், யாரையும் புண்படுத்தாதீர்கள், எவன் எப்படி வளருவான் என்று தெரியாது, இதுக்கு மேல் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது, ஜாக்கிரதை’ என்பதை மாதிரியான விஷயங்களை சொல்ல அங்கு இருந்த பத்திரிக்கை நண்பர்கள் அதை பெரிதாக எழுத அன்றிலிருந்தே பாலிவுட் சினிமா ரஜினியை ஓரங்கட்டி விட்டதாக மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : லோகேஷுக்கு இந்த நிலைமையா?.. இந்தியன் 2 படத்தால் வந்த சிக்கல்?..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.