பொட்டி நிறைய பணம்...கால்ஷீட் கொடுங்க!...ரஜினியை கடுப்பேத்திய தயாரிப்பாளர்...
நடிகர் ரஜினி சின்ன சின்ன வேடங்களில் நடித்து பைரவி படம் மூலம் ஹீரோவாக உயர்ந்தவர். துவக்கத்தில் அவர் வாங்கியது எல்லாம் சொற்ப சம்பளம்தான். 16 வயதினிலே படத்திற்கு அவருக்கு பேசிய சம்பளம் ரூ.5 ஆயிரம். அவருக்கு கொடுத்தது 3 ஆயிரம் மட்டுமே. ஆனால், படிப்படியாக வளர்ந்து இப்போது 100 கோடி சம்பளம் பெரும் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார்.
அவருக்கு ஒரு பழக்கம் உண்டு ‘உங்களுக்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கிறேன். கால்ஷீட் கொடுங்கள்’ என ஒரு தயாரிப்பாளர் கேட்டால் கடுப்பாகி விடுவார். ஆனால், அவரிடம் கோபத்தை கட்டாமல் ‘கண்டிப்பாக உங்களை அழைக்கிறேன்’ என நாகரீகமாக கூறி அனுப்பி விடுவார். அதன்பின் எந்த காலத்திலும் அவரின் தயாரிப்பில் நடிக்கவே மாட்டார். அது தனது ஈகோ சம்பந்தப்பட்ட விஷயமாக பார்ப்பார் ரஜினி.
இதையும் படிங்க: இவ்ளோதான் சம்பளம்.. இஷ்டம் இருந்தா நடி!…அஜித்தை அலறவிட்ட தயாரிப்பாளர்….
தமிழ் சினிமாவில் சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் என அதிக பட்ஜெட்டுகளில் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். ரஜினியை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்ட இவர் ஒருமுறை பெட்டி நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு சென்றார்.
ரஜினியிடம் ‘இந்த பணம் எல்லாம் உங்களுக்குதான்.. கால்ஷீட் கொடுங்க’ எனக்கூற, நாகரீகமாக கூறி அவரை அனுப்பிவிட்டார் ரஜினி. கடைசி வரை கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவே இல்லை..
பல வருடங்களாக படம் எடுக்காத கே.டி.குஞ்சுமோன் தற்போது ஜென்டில்மேன் 2 எடுப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.