திருப்பாச்சி படத்தை காப்பி அடித்த அண்ணாத்த.... சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்....

by ராம் சுதன் |
vijay-rajini
X

பொதுவா சினிமால காப்பி படங்கள் வெளியாகறது மிகவும் இயல்பான விஷயம் தான். அவ்வளவு ஏன் தமிழ் சினிமால பல படங்கள் வேறு மொழில இருந்து காப்பி அடிக்கப்பட்டதா விமர்சனங்கள் எழுந்தது. இப்போலாம் சினிமால படங்களுக்கும் தலைப்புகளுக்கும் பஞ்சம் வந்திருச்சு போல. அதான் பழைய படத்தோட தலைப்பையும், அந்த கதையையும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணி புதுசா பிரசன்ட் பண்றாங்க.

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். இப்போ தீபாவளி அன்னைக்கு நம்ம தலைவர் ரஜினிகாந்த் நடிப்புல உருவாகி இருக்கற அண்ணாத்த படம் வெளியாகி இருக்கு. ஒரு ரெம்ப பெரிய இடைவெளிக்கு அப்பறம் தலைவர் மிகவும் செண்டிமெண்ட்டா இந்த படத்துல நடிச்சிருக்காரு. அதுவும் தங்கச்சி செண்டிமெண்ட்.

சிவா இயக்கத்தில உருவாகி இருக்கற இந்த படத்த பார்த்த பலர் அப்படியே விஸ்வாசம் படத்தோட இரண்டாம் பாகம்னு கமெண்ட் பண்ணாங்க. ஆனா இப்போ வேற மாதிரியான மீம் ஒன்னு சோசியல் மீடியால டிரண்டாகிட்டு இருக்கு. ஆமாங்க விஜய் படத்தோட காப்பி தான் அண்ணாத்த படம்னு சிலர் சொல்றாங்க.

அதன்படி விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தோட கதையத்தான் அப்படியே அண்ணாத்த படமா எடுத்திருக்காங்களாம். கதைப்படி திருப்பாச்சி படத்துல தங்கச்சிக்காக சென்னைல இருக்கற ரெளடிங்கள அண்ணன் விஜய் அடிச்சு துவம்சம் பண்ணுவாரு.

annatha mems

annatha mems

அதேமாதிரி அண்ணாத்த படத்துல தங்கச்சி கீர்த்தி சுரேஷுக்காக கொல்கத்தால இருக்கற வில்லன்கள அண்ணன் ரஜினி அடிச்சு துவம்சம் பண்ணுவாரு. அதுவும் அவரோட தங்கச்சிக்கே தெரியாம. இதையே தான் திருப்பாச்சி படத்துலயும் விஜய் செஞ்சிருப்பாரு. படம் பார்த்த நமக்கே இதெல்லாம் தோணல ஆனா இவங்க எப்படி யோசிச்சிருக்காங்க பாருங்க.

இவங்க சொன்னதுக்கு அப்பறம் தாங்க லைட்டா டவுட் வருது. ஒருவேளை இருக்குமோனு. ஏன்னா ரெண்டு படத்தோட கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கு. என்ன சிவா இப்படி மாட்டிக்கிட்டீங்களே.

Next Story