Connect with us
banner

படத்தை பார்த்து ரஜினி இப்படி சொல்வாருனு எதிர்பாக்கல….! நடிகர் வெளியிட்ட பதிவு..

rajini_main_cine

Cinema News

படத்தை பார்த்து ரஜினி இப்படி சொல்வாருனு எதிர்பாக்கல….! நடிகர் வெளியிட்ட பதிவு..

கன்னட சினிமாவின் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 777 சார்லி. இந்த படத்தில் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது.

rajini1_cine

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ஒரு நாய்தான் நடித்துள்ளது. ஒர் நாயுக்கும் மனிதனுக்கும் உள்ள பாசத்தை இந்தப் படம் உணர்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பார்த்து பாராட்டியுள்ளார்.

rajini2_cine

ரஜினி பாராட்டியதை நடிகர் ரக்‌ஷித் செட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் போன் பண்ணி பேசியதை விபரமாக பதிவிட்டுள்ளார். ” ரஜினி சாரிடமிருந்து எனக்கு போன் அழைப்பு வந்தது. அவர் அந்த படத்தை நேற்று இரவு தான் பார்த்தாராம். பார்த்து பிரமிப்பில் வியந்தேன் என கூறினார்”.

rajini3_cine

மேலும் படம் தரமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும், படத்தின் ஆழமான வடிவமைப்புகள் குறித்தும், குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் குறித்தும் வியந்து பேசினார். அதாவது ஆன்மிக ரீதியான அந்த க்ளைமாக்ஸை அவர் நெகிழ்ந்து பேசினார்” என்று ரஜினி பேசியதை வியந்து ட்விட்டரில் பதிவிட்டார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top