Connect with us
saravana store

படம் பார்த்து மிரண்டு போன ரஜினி.. படக்குழுவினர் உற்சாகம்….

rajini

Cinema News

படம் பார்த்து மிரண்டு போன ரஜினி.. படக்குழுவினர் உற்சாகம்….

ரஜினிக்கு ஒரு பழக்கம் உண்டு. புதிய படங்கள் பலவற்றை பார்த்து அவருக்கு பிடித்திருந்தால் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் பாராட்டுவார்.

சிம்பு நடிப்பில் மாநாடு படம் வெளியான போது கூட அப்படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வெங்கட்பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா என அனைவரையும் போனில் அழைத்து பாராட்டியிருந்தார்.

rocky

நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கி. இவர் ராம் இயக்கிய தரமணி படத்தில் நடித்தவர். ராக்கி படத்தில் ரோகினி, பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வேலை கடந்த 2 வருடங்களாக நடந்து வந்தது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் தங்களின் ரவுடிபேபி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தை நடிகர் ரஜினி தனது வீட்டில் பார்த்துள்ளார். படத்தின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போன ரஜினி படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது ராக்கி படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top