லாரன்ஸுக்காக ரஜினி செய்த செயல்! ‘மாற்றம்’ உடனே வொர்க் அவுட் ஆயிடுச்சே

by Rohini |   ( Updated:2024-05-04 17:14:43  )
rajini
X

rajini

Actor Rajini: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்கள் அனைவரும் விரும்பத்தக்க நடிகராக வலம் வரும் ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில் அவரின் அடுத்த படமான கூலி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை மேலும் பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் கூலி. அந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பெரிய ஹைப்பில் வைத்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினியின் ஸ்டைல் இந்த படத்தில் அதிகமாக பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு ஆக்ஷன் நிறைந்த படமாக இந்த கூலி திரைப்படம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: ரஜினியை வைத்து மறுபடியும் படம் எடுப்பாரா கே.எஸ்.ரவிகுமார்? தெனாலி ரீ ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் ரஜினி இன்று திடீரென ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவருடைய சிஷ்யனான லாரன்ஸுக்கு அவருடைய வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் அந்த ஆடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. லாரன்ஸ் சமீபத்தில் தான் மாற்றம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தனது அடுத்த முயற்சியினை தொடங்கி இருக்கிறார்.

அதற்காக ரஜினி அவருடைய வாழ்த்தை தெரிவிக்கும் ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோவில் ரஜினி பேசியதாவது: ஆரம்பத்திலிருந்து ஏழை மக்களுக்கு உதவும் லாரன்ஸ் மாஸ்டர் அவர்களே இந்த மாற்றம் அறக்கட்டளையின் மூலம் இன்னும் நிறைய ஏழை எளிய மக்களுக்கு உதவும் உங்கள் எண்ணத்தை நினைத்து நான் பாராட்டுகிறேன். அதற்கு அந்த ஆண்டவனும் ரசிகர்களும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: சன் டிவி செஞ்ச வேலை!.. ராயனை டீலில் விட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!.. அப்செட்டில் தனுஷ்!…

Next Story