விமான நிலையத்தில் குடி போதையில் கலாட்டா செய்த ரஜினி!.. ஷாக்கிங் பிளாஷ்பேக்
கோலிவுட்டில் மன்னனாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். எங்கேயோ இருந்த சாதாரண மனிதனை அடையாளம் கண்டு சினிமாவிற்குள் கைபிடித்து அழைத்து வந்தவர் பாலசந்தர். கருப்பு நிறம், கோரை முடி, கசங்கிய சட்டை என பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தாலும் அவரின் முகத்தில் ஏதோ ஒளி இருந்ததை கண்டுபிடித்து கூட்டி வந்தார் பாலசந்தர்.
முதலில் ஒரு சிறிய கதாபாத்திரம். பரவாயில்லை என்று நடித்தாலும் தொடர்ந்து கிடைக்கிற கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு தன் இடத்தை தக்க வைத்தார் ரஜினி. அதன் பின் தொடர்ச்சியாக அவர்கள் (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), 16 வயதினிலே (1977), முள்ளும் மலரும் (1978), ப்ரியா (1978) என ரஜினியின் வாழ்வில் முக்கியமான படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன.
இந்தப் படங்கள் தான் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. புகழ் , பெருமை என ஒரு பக்கம் இருந்தாலும் காசு , பணம் சேர்ந்ததும் எல்லாவித கெட்டப் பழக்க வழக்கங்களும் அவரை தொற்றிக் கொண்டன. மது, புகை என அனைத்து பழக்கங்களுக்கும் அடிமையானார் ரஜினி.
அந்த வகையில் போதையில் இருந்த ரஜினியை ஒரு சமயம் போலிஸார் கைதும் செய்திருக்கின்றது. அதாவது படப்பிடிப்பை முடித்து விட்டு ஐதராபாத்திரத்தில் இருந்து சென்னைக்கு விமான நிலையத்தில் வந்த போது ரஜினி குடி போதையில் ரகளை செய்ததாக போலிஸாரால் கைது செய்யப்பட்டாராம்.
ரஜினியின் நண்பர்கள் சொல்லியும் கேட்காத ரஜினி தொடர்ந்து கத்தி கூச்சலிட்டு கொண்டபடி இருக்க அவரை தனி அறைக்கு இழுத்துச் சென்று விசாரித்தார்களாம். ஆனால் அங்கும் கோபத்தின் உச்சத்தில் இருந்த ரஜினி அதிகாரிகளிடமும் தொடர்ந்து ரகளை செய்த வண்ணம் இருந்தாராம். அதனால் தான் போலீஸார் அவரை கைது செய்ததாம்.
அப்படி இருந்தும் ரஜினி அந்த சமயம் மாபெரும் நடிகராக உருவாகிக் கொண்டிருந்தார். மேலும் அவரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கவும் பல இயக்குனர்கள் முன் வந்து கொண்டுதான் இருந்தனர்.