இந்த வயசுல உசுர கொடுத்து நடிச்சிருக்கேன்டா! லம்பா அடிக்கலானு பாத்தீங்களா? சன் பிக்சர்ஸிடம் பேரம் பேசும் ரஜினி

by Rohini |
rajini
X

rajini

ஜெய்லர் திரைப்படம் ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களுக்கும் ஒரு விழாக்கோலாகலமாகவே அமைந்து விட்டது. இன்னும் லீவு நாள்களில் ஜெய்லர் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து ரசிக்கின்றனர். இதற்கு முந்தைய படங்களான அண்ணாத்த, தர்பார் போன்றவைகளின் விமர்சனத்திற்கு ரஜினி இந்த படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

படம் வெளியாகி 10 நாள்களில் கிட்டத்தட்ட 500 கோடியை நெருங்கி விட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் வெளி நாடுகளிலும் இன்னும் வசூலை அள்ளிக் கொண்டு வருகிறது. இந்த வசூல் இன்னும் எகிறும் என்றும் சொல்லப்படுகிறது. ரஜினியே எதிர்பார்க்காத ஒரு வசூலை இந்த ஜெய்லர் திரைப்படம் அள்ளிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க : இவன் மட்டும் வேணாம்! அவனும் வேணும்… அடம் பிடிக்கும் தளபதி! கோலிவுட்டின் புதுக்கதை!

இந்த நிலையில் பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு சன் பிக்சர்ஸிடம் ரஜினி ஜெய்லர் திரைப்படத்தின் வசூலில் இருந்து தனக்கென ஒரு ஷேர் வேண்டும் என கேட்டதாக கூறினார். அவர் கேட்டிருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது என்றும் பாபா, குசேலன் போன்ற படங்களால் வினியோகஸ்தரர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்தனர்.

அப்போது ரஜினி தன் சொந்த செலவை போட்டு அவர்களின் நஷ்டத்தை ஈடுகட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட ரஜினி இப்போது ஷேர் கேட்பதில் எந்த தவறும் இல்லை என்று செய்யாறு பாலு கூறினார். மேலும் முத்து படத்தில் நடிக்கும் போது அவருக்கு சம்பளம் மிக குறைவாகத்தான் வழங்கப்பட்டதாம்.

இதையும் படிங்க : லியோவுக்கு லாக் வைச்சாச்சு… என்னடா திரையில ஓடுனதெல்லாம் தரையில நடக்குது!..

அதனால் ஏதாவது ஒரு ஏரியாவையும் சேர்த்து கேட்குமாறு ரஜினியின் நண்பர்கள் தூண்டுதலின் பேரில் ரஜினி ஏரியா வினியோகத்தையும் கேட்டாராம். அதே போல்தான் இந்த ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினிக்கு வழங்கப்பட்ட சம்பளம் 80 கோடி. ஆனால் வசூல் 500 கோடியை எட்டியிருப்பதால் தனக்கான ஒரு ஷேர் ரஜினி கேட்பதாக கோடம்பாக்கத்தில் கூறப்பட்டு வருகிறது.

Next Story