எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை கிழிக்க சொன்ன ரஜினி!.. பதறிய தயாரிப்பாளர்!.. அப்படி என்ன கோபம்!..

சினிமாவில் ஒருவரை பார்த்து ஒருவர் முன்னேறி இருந்தாலும், ஒருவரின் ஸ்டைலை பின்பற்றினாலும், தனக்கென ஒரு இடத்தை பிடித்தபின் தனக்கென ஒரு ஸ்டைலை பின்பற்றவே நினைப்பார்கள். 60களிலேயே சூப்பர்ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர்

நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து தமிழ் சினிமாவில் பெரிய ஆளுமையாக இருந்தவர்தான் எம்.ஜி.ஆர். அவர் இருக்கும் வரை பல நடிகர்கள் ஓவராக ஆட்டம் போடாமல் இருந்தனர். அரசியலுக்கு சென்று அவர் சினிமாவில் நடிப்பதை குறைத்த பின்னர் மற்ற நடிகர்கள் மேலே வந்தனர்.

இதையும் படிங்க: போட்டோவே வேணாம்.. ரஜினி அழைத்தும் வர மறுத்த ரசிகர்! என்ன காரணம்னு கேட்டா ஆச்சரியப்படுவீங்க

அப்படிப்பட்ட நேரத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான் ரஜினி, கமல், பாக்கியராஜ், விஜயகாந்த் போன்றவர்கள். இதில் ரஜினி, விஜயகாந்தை தவிர மற்றவர்கள் எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகினார்கள். அவர்கள் மீது எம்.ஜி.ஆருக்கு நல்ல அன்பு இருந்தது. ஆனால், சில காரணங்களால் எம்.ஜி.ஆருடன் ரஜினி நெருங்கி பழகவில்லை. எதாவது விழாவில் சந்தித்தாலும் மரியாதை செலுத்திவிட்டு ஓரமாக போய்விடுவார்.

அதற்கு காரணம் ரஜினியின் படங்களில் ஜெயலலிதா மற்றும் லதா ஆகியோரை நடிக்கவைக்க சில முயற்சிகள் நடந்தது. ஆனால், அது நடக்காமல் போனதன் பின்னணியில் எம்.ஜி.ஆர் இருந்ததாக சொல்லப்பட்டது. ரஜினி நடித்த திரைப்படம் ரங்கா. ஒருவிழாவுக்கு எம்.ஜி.ஆர் சென்றபோது ரங்கா பட போஸ்டர்கள் வழியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் ரஜினி வெறும் உடம்புடன் சிகரெட்டை பிடித்த படி போஸ் கொடுத்திருந்தார்.

rajini

இதைப்பார்த்து கோபமடைந்த எம்.ஜி.ஆர் அந்த படக்குழுவினரை அழைத்து இளைஞர்களை கெடுப்பது போல இருக்கும் இந்த போஸ்டர்களை கிழிக்க சொன்னார். மேலும், இதுபோல போஸ்டர்களை உருவாக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்திவிட்டு போனார். இந்த படத்திற்கு பின் ரஜினி நடித்த திரைப்படம்தான் பாயும் புலி. இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.

இதையும் படிங்க: சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்லாத டாப் நடிகர்கள்!.. ரஜினியிடம் முரண்டு பிடிக்கும் சத்தியராஜ்!…

இந்த படத்தின் ஒரு சண்டைக்காட்சி ஏவிஎம் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அங்கு வந்த ரஜினி அங்கிருந்த சுவரில் எம்.ஜி.ஆர் பட போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்ததை பார்த்து கோபமடைந்து ‘இங்க யார் இதெல்லாம் ஓட்டியது?.. உடனே கிழிங்க’ என சொல்லி இருக்கிறார். அதற்குள் அங்கே வந்த ஏவிஎம் சரவணன் ‘நான்தான் ஒட்ட சொன்னேன். இப்போது பல படங்களிலும் ரசிகர்கள் ரசிப்பதர்காக அப்படி செய்கிறார்கள்’ என அவரை சமாதனப்படுத்த முயல ரஜினியோ மறுத்துவிட்டார்.

புகழின் உச்சம் தொட்டவர் எம்.ஜி.ஆர். அவரின் புகழை பயன்படுத்தி நான் புகழடைய விரும்பவில்லை. அது எனக்கு தேவையுமில்லை. எனக்காக என் ரசிகர்கள் படம் பார்த்தால் போதும். மற்றபடி எம்.ஜி.ஆர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. போஸ்டரை கிழித்துவிடுங்கள்’ என கறாராக சொல்ல, அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் உடனே கிழிக்கப்பட்டது.

80களில் பாக்கியராஜ், ராமராஜன் உள்ளிட்ட பலரின் படங்களில் சண்டைக்காட்சிகளில் சுவர்களில் எம்.ஜி.ஆர் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். கமலின் சில படங்களில் கூட அது நடந்திருக்கிறது. ஆனால், அது தனக்கு வேண்டாம் என அப்போதே திட்டவட்டமாக மறுத்தவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story