என்ன வேகம்?.. போற வழியில் போலீஸுக்கு சல்யூட் போட்டு செல்லும் ரஜினி.. வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக அனைவராலும் அழைக்கப்படும் ஒரு உன்னத நடிகர். இவருக்கு என்று ஸ்டைல், மாஸ் என ஒரு பக்கம் இருந்தாலும் சிறந்த நடிகர் என்பதற்கும் ஏராளமான படங்கள் இருக்கின்றன.
தற்போது ஜெய்லர் படப்பிடிப்பில் படு பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதற்கான சூட்டிங்கில் தான் இப்போது பரபரப்பாக காணப்படுகிறார். மேலும் அண்மைக்காலமாக விமான நிலையத்தில் ரஜினியை அடிக்கடி காணமுடிகிறது.
ரசிகர்களும் குழந்தைகளும் விமான நிலையத்தில் ரஜினியுடன் புகைப்படம் எடுக்கும் காட்சிகளும் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இப்போது கேரளாவில் படமாக்கப்படுகிறதாம்.
அதற்காக ரஜினி கொச்சின் விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்திற்குள் வரும்போதே ஒரு சூறாவளி வருவதை போல படு வேகமாக நடந்து வந்தார். அவர் பின்னாடி இயக்குனர் நெல்சன் ஓடி வருகிறார். மேலும் ரஜினி வந்த வேகத்தில் எதிரே ஒரு போலீஸ் அதிகாரி நிற்க சட்டென ஒரு சல்யூட்டையும் போட்டு வேகமாக நடந்தார்.
இந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது. மேலும் விமான நிலையத்தில் ரஜினியை பார்த்த நடிகை அபர்ணா முரளி ரஜினியுடன் ஒரு செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ :https://www.instagram.com/reel/CqJ5HaCrvUa/?utm_source=ig_web_copy_link