கமலோட கல்யாணத்துல ரஜினி என்ன வேலை பாத்திருக்கார் பாருங்க!.. வெளியான புகைப்படம்!..
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி எப்படியோ அவர்களுக்கு பின் ரஜினி - கமல் என மாறியது. அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி ஒரு சின்ன வேடத்தில் அறிமுகமானபோது கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். எனவே, கமலுடன் நடித்தால் நாமும் பிரபலமாகலாம் என நினைத்தே அவருடன் பல படங்களிலும் ரஜினி இணைந்து நடித்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக பயணிப்போம் என முடிவு செய்து வெவ்வேறு பாதையில் சென்றனர். ரஜினியும், கமலும் மாறி மாறி ஹிட் கொடுத்தனர். ஆனால், ரஜினி படங்கள் அதிக வசூலை பெற்று அவரை சூப்பர்ஸ்டாராக மாற்றியது. ரஜினியும், கமலும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் தொழில்போட்டி இருந்து வந்தது. இப்போது வரை அது தொடர்கிறது.
இதையும் படிங்க: ஷூட்டிங் கிளம்பி ராங் ரூட்டில் போய் டிராபிக்கில் சிக்கிய ரஜினி!.. அப்புறம் நடந்துதான் ஹைலைட்!…
கமல்ஹாசன் மீது எப்போதும் உயர்ந்த எண்ணத்தையும், மதிப்பையும், மரியாதையும், அன்பையும் வைத்திருப்பவர் ரஜினி. பல சினிமா மேடைகளில் அதை பார்க்க முடியும். கமல்ஹாசனே சிறந்த நடிகர் என பல மேடைகளில் ரஜினியே பாராட்டியிருக்கிறார். கமலின் படங்களை பார்த்து எப்போதும் வியக்கும் நபராகவே ரஜினி இப்போது வரை இருக்கிறார்.
அதாவது ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் ரஜினி கமல் ரசிகராகத்தான் இருக்கிறார். ஆனால், இது ரஜினி - கமல் ரசிகர்களுக்கு புரியாமல் சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டு வருகின்றனர். ஒரு மேடையில் ‘சினிமாவில் நானும்,ரஜினியும் நட்பாக இருப்பது போல வேறு நடிகர்களை பார்க்க முடியாது. ரஜினி பேசுவது போல எவனும் பேசமாட்டான்’ என பேசியவர் கமல்.
இதையும் படிங்க: கமல் செஞ்சா நானும் செய்யணுமா?!… ஒரு படத்தில் கூட ரஜினி செய்யாத ஒரு விஷயம்…
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விக்ரம் எனும் மெகா ஹிட்டை கமல் கொடுத்தால், நெல்சனை வைத்து ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை ரஜினி கொடுத்துள்ளார். எனவே, ரஜினி - கமல் போட்டி என்பது இப்போதும் திரையுலகில் தொடந்து வருகிறது. ஆனாலும், இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.
கமல்ஹாசன் 1978ம் வருடம் வாணி கணபதி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதுதான் கமலின் முதல் திருமணம். அந்த திருமணத்தில் ரஜினியும் கலந்து கொண்டார். அதோடு, அந்த திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாகவும் கமலுக்கு ரஜினி இருந்துள்ளார். தற்போது, அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரஜினி கமல் ஜெயிக்கிறதுக்கு இதுதான் காரணம்!. நான்தான் கோட்டை விட்டேன்!. காலம்போன காலத்தில் புலம்பும் சத்தியராஜ்!…