Categories: Cinema News latest news

ரஜினி கேட்ட சம்பளம்.. வாய்ப்பை வேறொரு நடிகருக்கு கொடுத்த இயக்குனர்! அப்படி என்ன கேட்டார்?

Actor Rajini: தமிழ் சினிமாவில் இன்று உச்சம் தொட்ட நடிகராக சூப்பர் ஸ்டாராக ரஜினி வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு பின்னாடி எத்தனை கரடுமுரடான பாதைகளை கடந்து வந்திருக்கிறார் என்பதை அவரது நண்பர் ஒருவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் ரஜினி மிகவும் தாட்டியாகத்தான் இருந்திருக்கிறார். அடாவடி செய்வது, நடத்தையில் ஒரு முறைப்பு இப்படித்தான் இருந்திருக்கிறார். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே ரஜினிக்கு மதுப்பழக்கம் ஆரம்பமானதாம். கூடவே புகை பிடிக்கும் பழக்கமும் கூட. கண்டக்டராக இருக்கும் போது அந்த யூனியன் சார்பாக நாடகம் ஒன்றை அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: என்னை தூக்கிட்டு அந்த நடிகர போட்டாங்க!.. முதல் படத்திலேயே ஏமாந்து போன தேங்காய் சீனிவாசன்!..

அந்த நாடகம் தான் ரஜினி ஏறிய முதல் நாடக மேடை. அதில் ரஜின் சிறப்பாக செய்திருக்கிறார். அதனை தொடர்ந்தே அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை அதிகமாகியிருக்கிறது. அதுவும் வில்லனாக நடிக்கத்தான் ஆசைப்பட்டாராம் ரஜினி. சினிமாவில் ஒரு நிலையான இடத்தை எட்டியதும் தன் நண்பர்களை அவ்வப்போது சென்னைக்கு வரவழைத்து பார்த்து மகிழ்வாராம் ரஜினி.

ஒரு நேரம் இவரே பெங்களூர் சென்றும் பார்ப்பாராம். இன்று வரை இந்த நட்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறதாம். தமிழில் கொடிகட்டி பறக்கும் ரஜினி கன்னடத்திலும் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் சரியான சந்தர்ப்பங்கள் அமையாததாலும் தமிழில் பிஸியாக மாறியதாலும் கன்னட படத்தில் அதிகமாக ரஜினியால் நடிக்க முடியவில்லையாம். அதன்பிறகு கன்னட படம் ஒன்றின் வாய்ப்பு ரஜினியை தேடி வர ரஜினி அதை மறுத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: மக்களை நம்பி வர வேண்டாம்.. மக்கள் இவர நம்பனும்! அதுக்கு விஜய் இத பண்ணனும் – பேரரசு சொன்ன விஷயம்

‘சட்டம் ஒரு இருட்டறை’ கன்னடப் படத்தில் நடிப்பதற்காக ரஜினியிடம் கால்ஷீட் கேட்டார் துவாரகீஷ். இவர் அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை போன்ற படங்களை எடுத்த தயாரிப்பாளர். அதில் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டாலும் ‘தமிழில் எனக்கு கொடுக்கும் சம்பளத்தை கொடுத்தால் நான் நடிக்கிறேன்’ என கூற துவாரகீஷ் அந்த சம்பளத்தை கொடுக்க முன்வரவில்லையாம். அதனால் அந்த படத்தின் வாய்ப்பு சங்கர்நாக் என்ற நடிகருக்கு சென்று விட்டதாம்.

 

Published by
Rohini