Connect with us

கமல் நான் அத பத்தி பேசப் போறேன்…! நீங்க வேணும்னா…? மேடையில் மெய்சிலிர்க்க வைத்த ரஜினி….

kamal_main_cine

Cinema News

கமல் நான் அத பத்தி பேசப் போறேன்…! நீங்க வேணும்னா…? மேடையில் மெய்சிலிர்க்க வைத்த ரஜினி….

நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச் விழா. இந்த விழாவில் முக்கிய விருந்தினராக நடிகர் கமல் மற்றும் நடிகர் ரஜினி இருவரும் கலந்து கொண்டனர். படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

kamal1_cine

இறுதியாக பேசிய கமல் மற்றும் ரஜினி தன்னுடைய அனுபவங்களை மணிரத்தினம் மீதான அன்பை பகிர்ந்து கொண்டனர். இதில் நடிகர் ரஜினி பொன்னியின் செல்வன் படத்தையும் அதை அப்பவே யாரெல்லாம் எடுக்க முயற்சித்தார்கள் என்பதை பற்றியும் கூறினார்.

இதையும் படிங்கள் : பொன்னியின் செல்வனில் விஜயகாந்த்…பல வருடங்களுக்கு பின் ரஜினி சொன்ன சீக்ரெட்….

kamal2_cine

மேலும் பேசிய ரஜினி ஏற்கெனவே மணிரத்தினம் இயக்கத்தில் தளபதி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்த அனுபவங்களை பேச தொடங்கிய போது அருகில் கமல் நின்று கொண்டிருந்தார்.

kamal3_cine

உடனே கமலிடம் ரஜினி, கமல் நான் தளபதி படத்தை பற்றி பேச போகிறேன். நீங்கள் வேண்டுமென்றால் உட்காருங்கள் என கூறினார். தள்ளி இருந்த கமல் இதை சொன்னதும் ரஜினி மிக அருகில் வந்து தோளுடன் கை போட்டு நின்று விட்டார். உடனே இதை பார்த்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top