வீடு வாங்கி கொடுத்து நன்றியை தெரிவித்த ரஜினி!..யார் அந்த பிரபலம் எதற்காக தெரியுமா?..
என்னதான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியது கே.பாலசந்தர் என்றாலும் அவராலயும் ஒரு ஹீரோவாக நடிக்க முடியும் என்று முதன் முதலில் தன் படமான பைரவி படத்தில் ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளரும் இயக்குனரும் கதாசிரியருமான கலைஞானம் தான்.
ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க பயந்த ரஜினியை சமரசம் செய்து உன்னால் கதாநாயகனாக நடிக்க முடியும் என தெம்பூட்டியன் கலைஞானம். ஆகவே ரஜினியின் சினிமா வாழ்க்கையில் பாலசந்தருக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ அதே அளவுக்கு கலைஞானத்திற்கும் இருக்கிறது.
இந்த நன்றியை மறவாத ரஜினி தன் நன்றிக்கடனை சரியாக ஒரு மேடையில் வெளிப்படுத்தினார். கலைஞானத்திற்கு ஒரு விழா எடுத்து அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் பிரபலங்கள் சூழ மகுடம் சூட்டப்பட்டது. அப்போது பேசிய நடிகர் சிவக்குமார் கலைஞானத்திற்கு சொந்தமாக வீடு இல்லை என்பதை மேடையில் வெளிப்படையாக கூறினார். இதை கேட்ட அமைச்சர்கள் அரசு சார்பில் அவருக்கு வீடு கட்டி தரப்படும்
என வாக்குறுதி கொடுக்க
அந்த மேடையில் அமர்ந்திருந்த ரஜினி அரசாங்கம் செய்ய வேண்டாம், நான் வீடு வாங்கி தருகிறேன் என்று கூறி ஒரு பெரிய வீட்டையே வாங்கி கொடுத்திருக்கிறார். இதை கலைஞானமே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.