லோகேஷுக்கு அடுத்து இவர்தான்!. ரஜினி டிக் அடித்த இயக்குனர்.. தலைவர் 172 பரபர அப்டேட்..

Published on: November 9, 2023
rajini
---Advertisement---

Thalaivar 172 : தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் நெல்சனுடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வினாயக், தமன்னா, யோகிபாபு என பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘காவாலா’ பாடலே இப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. அதேபோல், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதும் ரசிகர்களை கவர்ந்து இப்படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியது. அதோடு, மோகன்லால், சிவ்ராஜ்குமார் என இரண்டு சூப்பர்ஸ்டார்களை உள்ளே இறக்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது.

Also Read

இதையும் படிங்க: கமலுக்கு வில்லனா நடிச்சது இவனா?!.. ஏற இறங்க பாத்து பாராட்டிய ரஜினிகாந்த்…

ரூ585 கோடி வசூல் வரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின் வசூல் பற்றி எதையும் சொல்லவில்லை. ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.700 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் வெற்றி ரஜினிக்கும், அவரின் ரசிகர்களுக்கும் பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

எனவே, சூட்டோடு சூடாக தனது 170 படத்தில் நடிக்க போய்விட்டார் ரஜினி. இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத்பாசில் என பலரும் நடித்து வருகின்றனர். அதேபோல், ரஜினியின் 172வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இதையும் படிங்க: ஒத்த வார்த்தைல ரஜினியை கடுப்பாக்கிய லாரன்ஸ்.. அதிகமா பேசினா இப்படித்தான் நடக்கும்!..

அனேகமாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது அவரின் கடைசிப்படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், ரஜினிக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லையாம். சமீபத்தில் நெல்சனை அழைத்த ரஜினி ‘ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை ரெடி பண்ணுங்க’ என சொல்லியிருக்கிறாராம். நெல்சனும் அதற்கான வேலையை துவங்கிவிட்டாராம்.

லோகேஷ் படம் முடிந்ததும், ரஜினியின் 172வது படமாக ஜெயிலர் 2 வெளியானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என சொல்லப்படுகிறது. சமீபகாலமாக் ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான்னு சொன்னீங்கள்ள!.. அப்புறம் ஏன் இத பண்றீங்க? விஜயை சீண்டும் ரஜினியின் குடும்ப வாரிசு