ஃபீல்டு அவுட் ஆன ஏவிஎம் நிறுவனத்தை ஸ்கூட்டரில் வந்து காப்பாற்றிய ரஜினி!.. இது புது மேட்டரா இருக்கே?..
தமிழ் சினிமாவில் பாரம்பரிய பட நிறுவனமாக இருந்து வருகிறது ஏவிஎம் நிறுவனம். எம்ஜிஆர்,சிவாஜி ஆகியோரை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிறுவனம் இந்தியாவில் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய போதே உருவான நிறுவனம் தான் ஏவிஎம்.
இதன் நிறுவனர் மெய்யப்பச்செட்டியார் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கும் நல்ல சிந்தனையாளர். இந்தப் படம் ஓடுமா , ஒடாதா என படத்தின் நாடித்துடிப்பை பார்த்தே கணிக்கக் கூடியவர் ஏவிஎம் மெய்யப்ப்ச்செட்டியார். அவரை அடுத்து அவரது மகன் சரவணன் இப்போது ஏவிஎம் நிறுவனத்தை நிர்வாகித்து வருகின்றார்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த ஏவிஎம் நிறுவனம் ஒரு சமயம் படங்களை தயாரிப்பதில் தொய்வு நிலையை எட்டியது. அப்போது மெய்யப்பச்செட்டியார் எதாவது படத்தை தயாரிக்கலாம் என எண்ணி பாரதிராஜாவை வைத்து ஒரு படம் பண்ணலாம் என நினைத்தார். அதே சமயம் கே.பாலசந்தரை வைத்தும் ஆக இருபடங்களை தயாரிக்கலாம் என நினைத்தார்.
ஆனால் அந்த இரு படங்களும் டேக் ஆஃப் ஆக வெகு நாள்கள் ஆனதால் சரவணன் ரஜினியை வைத்து எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கலாமா என மெய்யப்பச்செட்டியாரிடம் சரவணன் கேட்டார். அதற்கு மெய்யப்பச்செட்டியார் ‘யாரை வைத்து படம் எடுக்கவேண்டும் என சொல்லவில்லை, ஏதாவது ஒரு படம் தயாரிக்க வேண்டும் தான் சொன்னேன்’ என்று கூறி ரஜினி படத்திற்கு சம்மதித்தார்.
ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் மெய்யப்பச்செட்டியார் காலமாக அப்படியே பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை தயாரித்து மாபெரும் வெற்றி கண்டது ஏவிஎம் நிறுவனம். அந்த நேரத்தில் ரஜினி மிகவும் பிஸியாக இருக்க அவரை வைத்து படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது ஏவிஎம்.
அப்போது ஏவிஎம் நிறுவனத்தின் நிர்வாகியான வீரப்பனிடம் ‘ரஜினியை நான் பார்க்க வருகிறேன் என்று ரஜினியிடம் போய் சொல்லிவிட்டு வா’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். வீரப்பனும் ரஜினியிடம் போய் சொல்ல
அதற்கு ரஜினி சரவணன் இங்கே வருகிறாரா? நான் வருகிறேன், என்று சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க : மைக்கை கொடுத்துட்டு போயிட்டே இருப்பேன்!.. விடுதலை பட விழாவில் கடுப்பான இளையராஜா..
அப்போது அந்த நிர்வாகி ஸ்கூட்டரில் தான் வந்தாராம். உடனே வீரப்பன் எப்படி வருவீர்கள்? போய் காரை அனுப்புகிறோம் என்று சொல்லியும் கேட்காத மழை நேரத்தில் கூட வீரப்பனின் பின் ஸ்கூட்டரில் அமர்ந்து சரவணனை போய் சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பின் விளைவாக வெளியானது தான்‘முரட்டுக் காளை’ திரைப்படம். இன்று வரை ரஜினியின் அந்த எளிமை தான் சினிமாவில் அவரால் தாக்குப் பிடிக்க முடிகிறது என்று ஏவிஎம் சரவணனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.