தள்ளாடிய நிலையிலும் தில்லா வந்த ரஜினி!..கோபம் தலைக்கேற தலைவரை புரட்டி எடுத்த பாலசந்தர்!..
தமிழ் சினிமாவில் இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக ஒரு தலைவராக உச்ச நடிகராக நடிகர் ரஜினிகாந்த் திகழ்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் சிகரம் பாலசந்தரை மட்டும் சாரும். பாலசந்தரால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகர் ரஜினி.
தொடர்ந்து பல ஹிட் படங்களை ரஜினியை வைத்து கொடுத்திருக்கிறார் பாலசந்தர். ஒரு சமயம் ஏதோ ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஷாட்ஸ் முடிந்து விட்டது என சொல்ல ரஜினி பேக்கப் பண்ணி அறைக்கு வந்து மது குடித்திருக்கிறார். அந்த நேரங்களில் ரஜினி சிகரெட், குடிப்பழக்கம் இவற்றிற்கு கொஞ்சம் அடிமையாக தான் இருந்திருக்கிறார்.
அப்படி மது குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென பாலசந்தரிடமிருந்து இன்னும் ஒரு ஷாட் இருக்கிறது, வரவேண்டும் என அழைப்பு வர ரஜினிக்கு ஒரே பயம். என்னடா குடிச்சுருக்கோம், எப்படி அவர் முன்னாடி போய் நிக்கிறது என குழம்பியவாறே பாத்ரூமிற்கு சென்று குளித்து விட்டு பிரஸ் பண்ணி கொண்டு பாலசந்தர் முன்னாடி போய் நின்றிருக்கிறார்.
ஆனால் பாலசந்தர் ரஜினியிடமிருந்து வந்த அந்த வாசனையை வைத்து கண்டுபிடித்து விட்டாராம். உடனே ரஜினியை ஒரு தனி அறைக்கு அழைத்துக் கொண்டு போய் ‘சூட்டிங்கிற்கு குடிச்சிட்டு வந்திருக்கிறாயா? உன்ன செருப்பால அடிப்பேன், நாகேஷ் முன்னாடி நீ எல்லாம் ஒரு சிறு இரும்பு மாதிரி. அவர் உடம்பை இந்த பழக்கத்தால அவர் கெடுத்துக்கிட்டாரு, நீயும் அப்படி மாறப்போறீயா? ’ என ஆவேசமாக கத்தியிருக்கிறார் பாலசந்தர். அவ்ளோதான் அன்றைக்கு விட்ட குடிப்பழக்கம் இன்று வரை நான் தொடவில்லை என ரஜினி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.