ரஜினி இந்த வேலையை பண்ணிருக்கவே கூடாது...! ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தவித்த பாக்யராஜ்...

by Rohini |   ( Updated:2022-09-13 04:52:18  )
rajini_main_cine
X

தமிழ் சினிமாவில் உச்சத்தை பெற்ற நடிகராக திகழும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 80களில் இருந்து தன் திரைப்பயணத்தை தொடர்ந்து கொண்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் மற்ற நடிகர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

rajini1_cine

ஆனால் இவரை பற்றி நடிகர் பாக்யராஜ் கூறியது தான் ஆச்சரியத்தை வரவழைத்தது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த நான் சிகப்பு மனிதன், அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களில் நடிகர் பாக்யராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். ஆனால் கெஸ்ட் ரோலில் நடிக்க பாக்யராஜுக்கு விருப்பம் இல்லையாம்.

இதையும் படிங்கள் : கண்ணதாசனை அடிக்க ஓட ஓட விரட்டிய சிவாஜி… தடுத்து நிறுத்திய முக்கிய நடிகர்..

rajini2_cine

ஒரு சமயம் லதா ரஜினி மற்றும் ரஜினிகாந்த் மிகவும் வற்புறுத்தி அழைத்ததால் இந்த படங்களில் நடித்ததாக கூறினார். இந்த நிலையில் பாக்யராஜின் படமான வேட்டியை மடிச்சு கட்டு படத்திற்காக பாக்யராஜ் ரஜினியை கெஸ்ட் ரோலில் நடிக்க கூறினாராம். மேலும் அந்த சமயத்தில் பாக்யராஜ் மிகவும் பொருளாதார நெருக்கடியில் இருந்ததால் இந்த படத்தில் ரஜினி நடித்தால் அந்த பிரச்சினையும் சரியாகி விடும் என்ற காரணத்தால் ரஜினியை அணுகியிருக்கிறார்.

rajini3_cine

ஆனால் ரஜினியோ கெஸ்ட் ரோலில் நடிக்க முடியாது. வளர்ந்த நிலையில் இருக்கும் போது கெஸ்ட் ரோலில் நடித்தால் மக்கள் எந்த மாதிரி நினைப்பார்கள் என்ற காரணத்தால் முடியாது என கூறிவிட்டாராம். இதை கேட்டதும் பாக்யராஜுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்திருக்கிறது. அன்று நாம் நடித்துக் கொடுத்தோம். ஆனால் எனக்காக ரஜினி இதை பண்ணவில்லயே என்று நினைத்து வேதனையடைந்ததாக பாக்யராஜ் கூறினார்.

இதையும் படிங்கள் : அதிதியை அந்த மாதிரி யூஸ் பண்ணும் சிவகார்த்திகேயன்!…போட்ட ப்ளான் ஒர்க் அவுட் ஆகுமா?….

rajini4_cine

மேலும் ஒரு விழா மேடையில் ரஜினி இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து அன்று மட்டும் பாக்யராஜிற்கு அந்த உதவியை பண்ணியிருந்தால் அவர் பொருளாதார நெருக்கடியை சமாளித்திருக்க முடியும். ஆனால் என்னால் பண்ண முடியவில்லை. அதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும் என கூறினாராம்.

Next Story