சூர்யாவின் பான் இண்டியா ஹீரோ கனவுக்கு ஆப்பு!.. வேட்டையன் மூலம் ஸ்கெட்ச் வைக்கும் ரஜினி...
Vettaiyan: சமீபகாலமாகவே பான் இண்டியா படம் என்கிற வார்த்தை சினிமா உலகில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதாவது ஒரு திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாவதைத்தான் பான் இண்டியா படம் என சொல்கிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு மொழி திரைப்படம் அந்த மொழி பேசும் ரசிகர்களிடம் மட்டுமே வரவேற்பை பெறும். அல்லது டப்பிங் செய்யப்பட்டு சில படங்கள் ஹிட் அடிக்கும். 30 வருடங்களுக்கு முன்பே ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு ஹிட் அடித்திருக்கிறது.
இதையும் படிங்க: அஜித்தோடு மோதி வாங்குனது பத்தாதா?!.. பயம் இருக்கும்ல!.. ரஜினியை பங்கம் செய்யும் பிரபலம்
ஆனால், ராஜமவுலி இயக்கி பிரபாஸ் ஹீரோவாக நடித்து வெளியான பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலை அள்ளியது. அதன்பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே பான் இண்டியா படமாக வெளியானது.
அதேபோல், அல்லு அர்ஜுனின் புஷ்பா, யாஷின் கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய படங்கள் பான் இண்டியா படங்களாக வெளியாகி ஹிட் அடித்தது. எனவே, எல்லா பெரிய நடிகர்களுக்கும் நாம் பான் இண்டியா ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. இப்போது அந்த ஆசை சூர்யாவுக்கும் வந்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படம் பான் இண்டியா படம்தான். பல மொழிகளிலும் இப்படம் ரிலீஸ் ஆகிறது.
ஆனால், இந்த படம் வெளியாகவுள்ள அதே அக்டோபர் 10ம் தேதி ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது சூர்யாவுக்கு ரஜினி வைக்கும் செக் என்றே பலரும் கருதுகிறார்கள். கங்குவா படம் மூலம் ஹிந்தியில் கால்பதிக்க திட்டமிட்டிருக்கிறார் சூர்யா.
ஆனால், அதே தேதியில் வேட்டையன் படமும் ஹிந்தியில் வெளியாகும். இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சனும் நடித்திருக்கிறார். எனவே, வேட்டையனா? கங்குவாவா? என வந்தால் ஹிந்தி பட ரசிகர்கள் கண்டிப்பாக வேட்டையன் படத்தையே தேர்வு செய்வார்கள். அப்படி நடக்கும்போது ஹிந்தியில் கால் பதிக்க வேண்டும் என்கிற சூர்யாவின் ஆசை நடக்காது என்றே சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
இதையும் படிங்க: கோட் படத்துல மோகனை வெறி பிடிச்ச மாதிரி அலையவிட்ட விஜய்…! ரன்னவுட் ஆகலன்னா ஓகே!