40 வருஷ நண்பர்.. கண்டிப்பா உதவி செய்வாரு!. ‘பிதாமகன்’ தயாரிப்பாளரின் அலறலை கேட்டு ஓடி வந்து உதவிய ரஜினி..
சினிமா மட்டுமில்லை பொதுவாகவே இன்னிக்கு இருப்பார் நாளைக்கு இல்லை என்ற பொதுவான சூழ்நிலையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாருக்கு என்ன வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம். அது சினிமாவை பொறுத்து வரைக்கும் சொல்ல முடியாத நிலை தான்.
ஜெயிக்கிறவன் ஜெயிச்சுட்டே இருப்பான், திடீரென சறுக்கு ஏற்படும் போது பாதாள குழியில் விழ வேண்டியது தான். அப்படி பட்ட சூழ்நிலை தான் இப்போது பிதாமகன் பட தயாரிப்பாளரான வி.ஏ.துரைக்கு. பிதாமகன் மட்டுமில்லாமல் என்னம்மா கண்ணு,லூட்டி, கஜேந்திரா போன்ற பல படங்களை சினிமாவில் எடுத்து கெத்தாக வலம் வந்தவர் தான் வி.ஏ.துரை.
அவருக்கு சமீபகாலமாக சர்க்கரை வியாதி நோய் ஏற்பட்டு எலும்பும் டதோலுமாக காணப்படுகிறார். எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருக்கும் வி.ஏ.துரைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த சில சினிமா நண்பர்கள் அதற்கு மேல் போதிய பணம் இல்லாததால் வீட்டிற்கே கொண்டு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் சூர்யா துரையின் மருத்துவ செலவுக்காக 2 லட்சம் பண உதவி செய்திருக்கிறார். மேலும் வீட்டில் இருந்த படியே பேட்டியில் கூறிய வி,ஏ.துரை ரஜினியிடம் ஒரு கோரிக்கையும் வைத்தார். அதாவது ரஜினி அவருக்கு 40 வருட நெருங்கிய நண்பராம், தன் நிலை அறிந்து ரஜினி கண்டிப்பாக உதவி செய்வாரு என்ற அதிக நம்பிக்கையில் அந்த பேட்டியில் பேசியிருந்தார். மேலும் துரை ரஜினியின் பாபா படத்தில் எக்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசராக பணிபுரிந்திருக்கிறாராம்.
இதையும் படிங்க : அஜித் மீது முதன்முதலில் குற்றச்சாட்டு வைத்தவர் இவராகத்தான் இருக்கும்… அப்படி என்ன பண்ணார் தெரியுமா?
இவரின் இந்த பேட்டியின் எதிரொலி ரஜினியின் காதுக்கும் போக உடனே ரஜினி துரையை தொலைபேசியில் அழைத்து ‘ஒன்றும் கவலைப் படாதீர்கள், எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறாராம். மேலும் ஜெய்லர் படப்பிடிப்பு முடிந்ததும் அவரை நேரில் வந்து சந்திப்பதாகவும் கூறியிருக்கிறாராம்.