ஒரே ரஜினி.. ஒரே சூப்பர் ஸ்டார்! ‘கூலி’ படத்தின் டைட்டிலில் இத்தனை விஷயம் இருக்கா?

Published on: April 23, 2024
rajini
---Advertisement---

Rajini 171 Coolie: லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171வது திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் நேற்று வெளியானது. எப்போதுமே லோகேஷின் படங்கள் LCU கான்செப்ட்டில் அவர் எடுத்த முந்தைய படங்களின் தொடர்ச்சியாக வைத்திருப்பார். ஆனால் இந்த கூலி படத்தின் படத்தில் ரஜினியின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ்களை லோகேஷ் வைத்துள்ளதாக தெரிகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நேற்றுதான் இந்தப் படத்தின் டைட்டிலுடன் டீஸர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் தங்கக் கட்டிகள், வாட்ச்கள், தங்க சிலைகள் என ஒரு கடத்தல் கும்பல் அபகரிக்க அவர்களை கூண்டோடு பிடித்து துவம்சம் செய்யும் வகையில் ரஜினி மாஸாக எண்ட்ரி ஆகிறார்.

இதையும் படிங்க:பிகில் நடிகைதான் அதை பண்ணுவாங்களா!.. பீஸ்ட் நடிகை நானும் பண்ணுவேன்!.. கல்யாண வைபவம் ஸ்டார்ட்!..

1995 ஆம் ஆண்டு இதே தலைப்பில் சரத்குமார் மற்றும் மீனா நடிக்க கூலி படம் வெளியானது.ரஜினியின் இந்த கூலி படத்தின் டைட்டில் டீஸர் ப்ளாக் அண்ட் ஒயிட்டில் வெளியாகியிருக்கிறது. அதனால் ரஜினி இதற்கு முன் நடித்த படங்களின் தொடர்ச்சியை இந்தப் படத்திலும் வைத்திருப்பார் என்று தெரிகிறது. 1979 ஆம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தில் அமைந்த பாடல் ‘சம்போ சிவ சம்போ’.

இந்தப் பாடல் வரிகள் 1982 ஆம் ஆண்டு ரஜினி நடித்த ரங்கா படத்தில் வசனமாக அமைந்தது. இப்போது அதே வசனத்தை இந்த கூலி படத்திலும் வைத்திருக்கிறார் லோகேஷ். இதோ அந்த வசனம் ‘அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள். தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள். தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே.’

இதையும் படிங்க: குடிச்சிட்டு தாலியை கழட்டி எறிந்த மிருணாளினி ரவி!.. வீடியோவை பார்க்கும் போதே பகீர்னு ஆகுதே!..

கைதி படத்தில் இருந்து லோகேஷ் LCU கான்செப்ட்டை உள்ளே புகுத்தி வரும் நிலையில் லியோ படத்தில் LCU வொர்க்ட் அவுட் ஆகவில்லை. அதனால் கூலி படத்தில் ரஜினியின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ்களை மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் எந்த மாதிரி படத்தை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக விக்ரம் படம் மாதிரி ரஜினிக்கும் ஒரு தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. ரஜினி உழைப்பாளி படத்தில் கூலியாக நடித்திருப்பார். அதனால் அந்தப் படத்தின் ரெஃபரன்ஸும் இதில் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.