இருக்கிற பிரச்சினை பத்தாதுனு இது வேறயா....? ரஜினிக்கும் தனுஷுக்கும் இடையே வில்லங்கத்தை ஏற்படுத்தும் நடிகர்...
சமீபகாலமாகவே தமிழ் சினிமாவையே பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்திய சம்பவம் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து தான். இந்த சம்பவம் திரையுலகை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரும் 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து தற்போது பிரிவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருக்க தனுஷ் மட்டும் தான் போகிற இடங்களெல்லாம் தன்னுடைய மகன்களை மட்டும் அழைத்து கொண்டு செல்வார். பின் ஒரு சமயம் மகனின் பள்ளி விழாவில் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக சேர்ந்து புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிங்கள் : குனிஞ்சி காட்டுறேன்…நல்லா பாத்துக்கோ!….பூனம் பாஜ்வா அடாவடி தாங்கலயே!….
இப்படி பிரச்சினை போய்க் கொண்டிருக்க தனுஷுக்கு அடுத்து அடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி வசூலை கோடி கோடியாக அள்ளிக் கொண்டிருக்கின்றன. அடுத்ததாக செல்வராகவனின் நானே வருவேன் படம், வாத்தி படம் வரிசை கட்டி நிற்கின்றனர்.
இதையும் படிங்கள் : விக்ரமிற்கு இன்னும் எதற்கு இந்த வேண்டாத வேலை…! ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா நம்ம சீயான்…?
இதை அடுத்து கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க தயாராகி கொண்டிருக்க அவருக்கு வில்லனாக மலையாள நடிகர் எந்த கதையையும் ஏற்று நடிக்க கூடிய நடிகர் விநாயக்கை கமிட் செய்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறாராம். நடிகர் விநாயகம் ஏற்கெனவே ரஜினியில் ஜெய்லர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரே நடிகர் மாமனார், மருமகன் படத்தில் அங்கு இங்குமாக ஓடி கொண்டிருக்க இதன் காரணமாக புது பிரச்சினை வராமல் இருந்தால் சரி என்கின்றனர் கோடம்பாக்கத்தில்.