More
Categories: Cinema News latest news

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா.. ஜெயிலர்ல ரஜினி பண்ணது ரொம்ப தப்பு- கட் அண்ட் ரைட்டா சொன்ன தயாரிப்பாளர்..

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா பெரிதும் பேசப்பட்டது. அதில் ரஜினி பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது என்றே கூறலாம்.

Advertising
Advertising

இதையும் படிங்க-  இந்த முறை பின் வாங்குறதே இல்லை!.. அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.. ஜெயிலர் மொத்த வசூல் இவ்ளோவா!..

அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் பிரச்சனை தான் ஹாட் டாப்பிக்காக இருந்தது. அப்போது, ரஜினி மேடையில் பேசிய காக்கா கழுகு கதை, அந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்கிவிட்டது. அதோடு, ரஜினி மேலும் பல விஷயங்களை பேசினார்.

தயவு செய்து யாரும் மது பழக்கத்திற்கு, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள். உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. நான் உங்களிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். நான் அவற்றிற்கு அடிமையானதால் பல பிரச்சனைகளை சந்தித்தேன்.

இல்லையென்றால், இந்நேரம் எங்கேயோ முன்னேறியிருப்பேன் என்று ரஜினி பேசியிருந்தார். இந்நிலையில், தயாரிப்பாளர் கே.ராஜன், ரஜினியின் இந்த பேச்சு குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில், ரஜினி எனக்கு நல்ல நண்பர் தான். ஆனால் ஜெயிலர் படத்தில் அவர் செய்தது தவறான விஷயம். ஆடியோ லாஞ்ச் விழாவில், யாரும் மது அருந்தாதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என்று கூறிவிட்டு, ஜெயிலர் படத்தில், ஸ்டைலாக புகைப்பிடித்துக்கொண்டிருக்கிறார். இதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

என் நண்பராகவே இருந்தாலும், இது தவறு தான். ரஜினி, இதை தவிர்த்திருக்க வேண்டும். படம் நன்றாக இருக்கிறது. நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சி தான் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க-  அமெரிக்காவில் தாறுமாறா கலெக்‌ஷனை அள்ளும் ஜெயிலர்!.. அட காரணம் இதுதானாம்!…

Published by
prabhanjani

Recent Posts