‘முரட்டுக்காளை’ படத்தில் ஜெய்சங்கர் வில்லனா?.. ஷாக் ஆன ரஜினி என்ன செய்தார் தெரியுமா?..
ஒரு காலகட்டத்தில் முடங்கிக் கிடந்த ஏவிஎம் நிறுவனத்தை தலை நிமிர வைத்த பெருமை நடிகர் ரஜினிகாந்தையே சேரும். மெய்யப்பச் செட்டியார் மீண்டும் தன் நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கிய போது சரவணனின் சரியான தேர்வாக ரஜினி இருந்தார்.
அவரை வைத்து ஏதாவது படம் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்த சரவணன் அதை இயக்கும் பொறுப்பை எஸ்.பி,முத்துராமனிடம் கொடுத்தார். இந்த தகவல் அறிந்த ரஜினி மிகவும் மகிழ்ச்சியுற்றார். விஷயம் அறிந்தவுடன் ரஜினியே சரவணனை பார்க்க அவரது அலுவலகத்திற்கு வந்து தன் சம்மதத்தை தெரிவித்தார்.
ஒரு வழியாக ரஜினி, எஸ்.பி,முத்துராமன், ஏவிஎம் சரவணன் இவர்கள் கூட்டணியில் உருவான படம் தான் ‘முரட்டுக்காளை’ திரைப்படம். இந்தப் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினிக்கு ஒரு சரியான வில்லனை போடவேண்டும் என கதையாசிரியர் பஞ்சு கூறியிருக்கிறார்.
அதுவும் எப்போதும் போல இருக்கிற வில்லனை போடாமல் வித்தியாசமாக ஒரு வில்லன் கதாபாத்திரமாக அமைய வேண்டும் என சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பஞ்சு மனதில் முன்பே தோன்றியவர் நடிகர் ஜெய்சங்கர். அவர் பெயரை குறிப்பிட்டதும் முத்துராமனும் சரி என்று சொல்லிவிட்டு ரஜினியிடம் இந்த தகவலை கூற சென்றனர்.
ஜெய்சங்கர் வில்லன் என கேள்விப்பட்ட ரஜினி உடனே ஷாக் ஆனாராம். அதோடு ‘இந்த கதாபாத்திரத்திற்கு அவர் ஓகே சொல்லிவிட்டாரா?’ என்றும் கேட்டிருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் எனக்கு எவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே முக்கியத்துவத்தை ஜெய்சங்கருக்கும் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
மேலும் நான் வரும் காட்சிகள் எல்லாவற்றிலும் எனக்கு சரி சமமான காட்சிகளும் அவருக்கு கொடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். அதன் விளைவாகத்தான் அந்தப் படத்தின் ரிலீஸ் சமயத்தில் போஸ்டரில் ரஜினியை எப்படி பெரிதாக காட்டினார்களோ அதே அளவுக்கு ஜெய்சங்கரையும் பெரிதாக காட்டியிருப்பார்கள்.
இதையும் படிங்க : பெரிய ஸ்டார் இல்ல.. பெரிய இயக்குனரும் இல்ல!.. ஆனாலும் மாஸ் ஹிட் அடித்த படங்களின் பட்டியல்..
வில்லனாக இருந்தாலும் அந்தக் காலத்தில் சினிமாவில் மேல் நாட்டு நாகரீகத்தை கொண்டு வந்த நடிகர்களில் ஜெய்சங்கர் மிக மிக முக்கியமானவர் மற்றும் வெள்ளி விழா நாயகனாகவும் இருந்தார் என்பதற்காக அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ரஜினி சரியாக இந்தப் படத்தில் கொடுத்து கௌரவப்படுத்தினார்.