இளையராஜாவை ரஜினி ஒதுக்கவில்லை!.. நடந்த விஷயமே வேற!.. அட என்னப்பா சொல்றீங்க!..
தளபதி படத்துக்குப் பிறகு தான் இளையராஜா மேல் ரஜினி கோபமாக இருந்ததாகவும் அதன்பிறகு தான் அவர் ஒதுங்கினார் என்றும் இணையத்தில் உலா வருகிறது. தற்போது கூலி படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. கூலி படத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தது பற்றியும் ரஜினி பேசவே இல்லையாம். ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்று பார்ப்போம்.
இதையும் படிங்க... தளபதி பட விழாவில் இளையராஜா செய்த வேலை!.. ரஜினி அவரை ஒதுக்க காரணமாக இருந்த சம்பவம்!…
தளபதி படம் பெரிய அளவில் இன்று வரை பேசப்படும் திரைப்படம். அண்ணாமலை பாலசந்தரின் தயாரிப்பு. இதுக்கு முன்னாடி பாலசந்தருக்கும், இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடுகள் வருகிறது. 6 படங்களில் தான் இருவரும் இணைந்துள்ளனர். புதுப்புது அர்த்தங்கள் படத்தின் போது தான் பிரச்சனை வருகிறது. தீபாவளிக்குப் படத்தை ரிலீஸ் பண்ணனும்.
ரீ ரிக்கார்டிங் போட்டுக் கொடுங்க என இளையராஜாவை அவசரப்படுத்த அவர் எதையோ வச்சிக்குங்கன்னு ஒரு வேகத்தில் சொல்லிவிட்டாராம். உடனே இளையராஜா இசை அமைத்த பழைய படங்களின் ரீரிக்கார்டிங்கை எடுத்து இதில் சேர்த்து விட, இது இளையராஜாவுக்கும் தெரிய பிரச்சனை வந்து கோபப்பட்டு இனி உங்க படத்துக்குப் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
அண்ணாமலை படத்திற்கு முதலில் வசந்த் தான் இயக்குனராக இருந்தாராம். அவர் ஏதோ ஒரு பிரச்சனையால் வெளியேறுகிறார். அதன்பிறகு சுரேஷ்கிருஷ்ணா இயக்குகிறார். அண்ணாமலை படத்திற்கு முதலில் இசைக்கு அணுகியது இளையராஜாவைத் தானாம். அதற்கு அவர் பாலசந்தர் இயக்கத்திற்கு மட்டுமல்ல. அவரது தயாரிப்புக்கும் என்னால் இசை அமைக்க முடியாது என்று சொல்லி விட்டாராம். பலமுறை கேட்டும் மறுத்து விடுகிறார். அதன்பிறகு தான் தேவாவை முடிவு பண்ணினார்களாம்.
உண்மையில் ரஜினி தளபதி படத்தில் இளையராஜா லேட்டா வந்ததற்கு கோபப்பட்டாரா என்றால் கண்டிப்பா வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்குப் பிறகு அவர் அந்தக் கோபத்தை இளையராஜா மீது வைக்கவில்லை. ரஜினியைப் பொறுத்தவரை தயாரிப்புக்குள் தலையிட மாட்டார். ஏன்னா அதன்பிறகு தான் பாண்டியன், வீரா, எஜமான் என பல படங்களுக்கு இளையராஜா இசை அமைத்தார். அதன் பிறகு ட்ரெண்ட் மாறியதால் தேவா, வித்தியாசாகர், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இசை அமைத்தனர்.