Cinema History
நெருங்கிய நண்பர்!.. ஆனாலும் ஜெய்சங்கர் இறப்புக்கு போகாத ரஜினி.. என்ன காரணம் தெரியுமா?…
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு முன்பே பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஜெய்சங்கர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே பல ஹிட் படங்களை கொடுத்தவர். ஹாலிவுட் பாணியில் துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்தில் பல படங்களில் நடித்ததால் இவரை தமிழக ஜேம்ஸ் பாண்ட் என்றும் ரசிகர்கள் அழைத்தனர். பல புதிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை உருவாக்கிவிட்டவர்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நேரத்தில் ரஜினி நடித்த முரட்டுக்காளை திரைப்படத்தில் ஈகோ பார்க்காமல் வில்லனாக நடித்தார். அது கிளிக் ஆகவே தொடர்ந்து வில்லனாகவே பல படங்களில் நடித்தார். ரஜினியின் பல படங்களில் வில்லனாக கலக்கியுள்ளார். எனவே, ரஜினிக்கும், இவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. நடு இரவில் கூட ஜெய்சங்கரிடம் தொலைப்பேசியில் ரஜினி பல மணி நேரம் பேசுவாராம். அதேபோல், அடிக்கடி அவரின் வீட்டிற்கும் நேரில் சென்று நேரம் செலவழிப்பாராம் ரஜினி.
ரஜினி நடித்த தளபதி திரைப்படத்தில் ஏறக்குறைய அவரின் அப்பா வேடத்தில் ஜெய்சங்கர் நடித்திருப்பார். அதுதான் ஜெய்சங்கருடன் ரஜினி நடித்த கடைசி திரைப்படம். இவர் 2000ம் ஆண்டு ஜூலை மாதம் மரணமடைந்தார். நெருங்கிய உறவினராக இருந்தும் அவரின் மரணத்திற்கு செல்லவே இல்லை.
ஜெய்சங்கரின் மரணசெய்தியை கேள்விப்பட்டதும் அவரின் மகனை தொலைப்பேசியில் அழைத்த ரஜினி ‘நான் வீட்டிற்கு வரும்போது ஸ்டைலாக ஹாய் ஹாய் என சிரித்த முகத்துடன் உன் அப்பா என்னை வரவேற்பார். தற்போது பிணமாக அவர் கிடப்பதை பார்க்கும் சக்தி எனக்கு இல்லை. எனவே, நான் வரமாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்’ என சொன்னாராம் ரஜினி. இந்த தகவலை ஜெய்சங்கரின் மகன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினியின் படத்தை மட்டும் எடுத்திருந்தா?.. இவர நம்புனதுக்கு?.. கேப்டனை பற்றி புலம்பும் இயக்குனர்!..