Categories: Cinema News latest news

கமல் செஞ்சா நானும் செய்யணுமா?!… ஒரு படத்தில் கூட ரஜினி செய்யாத ஒரு விஷயம்…

தமிழ் சினிமாவில் ரஜினியும், கமலும் நெருங்கி நண்பர்கள் என்றாலும் நடிப்பில் இருவருக்குமே வெவ்வேறு பாதை இருப்பது மட்டுமே உண்மை. வித்தியாசமான கதை, அதிரடி கதாபாத்திரங்கள், பல மணி நேர மேக்கப் என கமல் உழைப்பை கொட்டி நடிப்பார். மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளால் ரசிகர்களை கொள்ளை அடிப்பவர் ரஜினி.

கமல் உச்ச நட்சத்திரமாக இருந்த காலத்தில் அவரின் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை பாலசந்தர் அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ச்சியாக கமலின் பல படத்தில் அவருக்கு வில்லனாக ரஜினி தான் நடிக்கிறார். அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் வர துவங்குகிறது.

இதையும் படிங்க: விஜயை மட்டுமல்ல ரஜினியையுமே வச்சு செய்த பிரச்னை… அவரின் படத்துக்கே தடை உத்தரவு போட்ட பின்னணி!

இருவரும் இருவேறு உச்சத்தில் வளர்ந்து வருகின்றனர். கமலே இனி உன் வழியில் நீ போ. இனி நாம் இணைந்து நடிக்க வேண்டாம் என ரஜினியிடம் கூறிவிடுகிறார். அதைதொடர்ந்து இருவரும் ஒன்றாக நடிக்கவே இல்லை. கமர்ஷியல் நாயகனாக ரஜினி வளர்ந்து சூப்பர்ஸ்டார் உச்சத்தினை அடைகிறார்.

கமல் தனது நடிப்புக்கு தீனி போடும் படங்களை தேர்வு செய்து நடித்துவந்தார். இருந்தும் கமல் சில படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடித்து விடுவார். பல படங்களில் நடிகையுடன் லிப்லாக் காட்சிகளில் நடித்தும் இருக்கிறார். இதனால் கமலுக்கு காதல் மன்னன் என்ற செல்ல பெயரும் இருக்கிறது.

ஆனால் ரஜினி இதுவரை நடிகையுடன் அதிகமான நெருக்கமான காட்சிகளில் நடித்தது இல்லை. அவர் நடிப்பில் வெளியான 169 படத்தில் ஒன்றில் கூட லிப்லாக் காட்சி இடம் பெற்றதே இல்லை. இதை தனது சமீபத்திய வீடியோ ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆசை அறுவது நாள்.. மோகம் மூப்பதே நாள்.. ப்ரியா ஆனந்துடன் லிவிங் டூகெதர்.. கூத்தடித்து விட்டு ப்ரேக்அப் செய்த அதர்வா?…

Published by
Akhilan