ரஜினி படத்தை இயக்கப்போவது அவர்தானாம்!... சும்மா கலக்கல் கூட்டணி....

by சிவா |
rajini
X

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிவா இயக்கியிருந்தார். தீபாவளிக்கு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படத்திற்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கார்த்திக் சுப்பாராஜ், தேசிங்கு பெரியசாமி, கே.எஸ்.ரவிக்குமார் என சிலரின் பெயர்கள் அடிபட்டது.

rajinikanth

தற்போது பாலிவுட் பட இயக்குனர் பாலகிருஷ்னனின் பெயர் அடிபடுகிறது. திரையுலகில் இவரை பால்கி என அழைப்பார்கள். பாலிவுட்டில் Cheeni kum, shamitabh உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். shamitabh படத்தில் அமிதாப்புடன் இணைந்து தனுஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அது குடும்ப பாங்கான கதை எனக்கூறப்படுகிறது. இந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், பாலிவுட்டில் இருந்து ஒரு தயாரிப்பாளர் இப்படத்தை தயாரிக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

balki

எல்லாம் சரியாக நடந்தால் ரஜினியின் அடுத்த படத்தை பால்கியே இயக்க வாய்ப்பிருக்கிறது.

Next Story