13 நாள் தான் கால்ஷீட்!..ரஜினியின் இந்த கெடுவால் பரிதவித்த ஏவிஎம் நிறுவனம்!..படம் என்னாச்சுனு தெரியுமா?..
தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்தே மிகவும் பிரபலமாக இயங்கி வந்த தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் என்பவர்தான் இந்த நிறுவனத்தை தொடங்கினார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அந்த காலத்தில் இருந்தே பல முன்னனி நடிகர்களை வைத்து பெரிய பெரிய ஹிட் படங்களை தொடர்ந்து தயாரித்து வந்தது ஏவிஎம் நிறுவனம். ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பில் தொய்வு ஏற்பட பல பிரச்சினைகளில் சிக்கியது ஏவிஎம்.
இதையும் படிங்க : உங்களுக்கு நல்ல படம் வேணும்னா இத பண்ணாதீங்க!..ரசிகர்களிடம் கெஞ்சிய சிம்பு!..
இந்த நிலையில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் நடிகர் ரஜினி அந்த நேரத்தில் மிக உச்ச நடிகராக இருந்தார். ஏவிஎம் நிறுவனத்தில் இந்த நிலையை அறிந்த ரஜினி தாமாக முன்வந்து என்னை வைத்து ஒரு படம் எடுங்கள், 13 நாள்கள் மட்டும் கால்ஷீட் தருகிறேன். அந்த இடைப்பட்ட நாள்களுக்குள் என்ன படம் வேண்டுமென்றாலும் எடுங்கள்.
ஆனால் எடுக்கிற படம் என்னுடைய இமேஜை பாதிக்காத அளவுக்கு இருக்க வேண்டும் என கூறினாராம். உடவே ஏவிஎம் சரவணனுக்கு அப்படியே ஒரு கிலோ அல்வாவை வாயில் வைத்தாற் போல் இருக்க ரஜினியின் ஆஸ்தான இயக்குனரான எஸ்.பி.முத்துராமனிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். அவரும் ரஜினிக்காக ஒரு முழு ஸ்கிரிப்டை தயார் செய்து படத்தை தயாரித்திருக்கின்றனர். அந்த படம் தான் ரஜினியின் நடிப்பில் உருவான ‘ராஜா சின்ன ரோஜா’ திரைப்படம். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.