இறக்கும் தருவாயில் மயில்சாமியின் கடைசி ஆசை.. நிறைவேற்றத் துடிக்கும் ரஜினி!..

by Rohini |   ( Updated:2023-02-20 06:15:02  )
rajini
X

rajini

தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியது நடிகர் மயில்சாமியின் மரணம். மாரடைப்பால் காலமான மயில்சாமியின் உடலுக்கு திரையுலகை சார்ந்த பலரும் நேற்று அஞ்சலி செலுத்த வந்தனர். தமிழ் சினிமாவில் கவுண்டமணி,வடிவேல் மாதிரி முன்னனி நகைச்சுவை நடிகராக இல்லாவிட்டாலும் பிரபலங்கள் அனைவருக்கும் பிடித்த கலைஞராகவே வாழ்ந்திருக்கிறார் மயில்சாமி.

‘தாவணிக்கனவுகள்’ படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பகாலங்களில் மிமிக்ரி கலைஞராகத்தான் பணிபுரிந்திருக்கிறார். பல குரலில் பேசுவதில் வல்லவர் மயில்சாமி. மேலும் 80களில் வெளிவந்த படங்களின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் இவரின் குரல் பின்னனி ஒலிகளாக ஒலித்திருக்கிறது.

எம்ஜிஆர் மீது அதிக அன்பு கொண்டவர். எம்ஜிஆரின் தீவிர ரசிகர் மயில்சாமி. பல விழா மேடைகளில் பேசும் போது பெரும்பாலும் எம்ஜிஆரை பற்றித் தான் பேசிக் கொண்டிருப்பார். மற்றவர்களின் மீது அதிக இரக்கக் குணம் படைத்தவராகவும் இருந்திருக்கிறார்.

rajini1

mayilsamy

நேற்று சத்யராஜ் அஞ்சலி செலுத்த வந்த போது யாருக்காவது எதாவது உதவி வேண்டுமென்றால் சில சமயங்களில் சத்யராஜை அணுகுவாராம். இதை நேற்று சத்யராஜ் பேட்டியில் கூறினார். எப்படியாவது தன்னிடம் உதவி என்று வருவோர்க்கு தன்னால் இயன்ற அளவுக்கு உதவிகளை செய்து வந்தவர். தீவிர சிவ பக்தராக இருந்த மயில்சாமி சரியாக சிவராத்திரி அன்று காலமாயிருக்கிறார்.

கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். கூடவே டிரம்ஸ் சிவமணியும் சென்றிருக்கிறார். கோயிலில் சிவமணி டிரம்ஸ் வாசிக்க சிவனை தன் மனம் உருக மயில்சாமி தரிசிக்கும் வீடியோ வைரலானது. பூஜைகளை முடித்து விட்டு சிவமணியிடமும் பேசிவிட்டு தான் வீடு திரும்பும் வழியில் நெஞ்சு வலி ஏற்பட்டு காலமாயிருக்கிறார். இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சி அளித்ததை போல இரவு முழுவதும் ஒன்றாக இருந்த சிவமணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

rajini2

mayilsamy

இந்த நிலையில் அந்த கோயிலில் வைத்து டிரம்ஸ் சிவமணியிடம் மயில்சாமி திடீரென ரஜினியை பற்றி பேசினாராம். அதாவது ரஜினி வந்து இந்த கோயிலுக்கு பாலாபிஷேகம் செய்தால் நன்றாக இருக்கும் என டிரம்ஸ் சிவமணியிடம் கூறினாராம். இது தான் மயில்சாமியின் கடைசி ஆசையாகக் கூட இருந்திருக்கிறது.

இதையும் படிங்க : பலமுறை வந்த நெஞ்சுவலி.. கவனிக்காமல் விட்ட மயில்சாமி.. பகீர் தகவல்!..

இதைப் பற்றி நேற்று ரஜினி மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது நிரூபர்கள் கேட்டனர். அதற்கு ரஜினி ‘ நானும் கேள்விப்பட்டேன், இதைப் பற்றி சிவமணியிடம் பேசி என்ன செய்யலாம் என்று ஆலோசித்து கண்டிப்பாக மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன்’ என்று கூறினார்.

Next Story