நீ நல்லாவே இருக்க மாட்டே!...தனுஷுக்கு சாபம் விடும் ரஜினி ரசிகர்கள்....
நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வீட்டை வீட்டு தனுஷின் வீட்டிலே சென்று தங்கி நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என அடம்பிடித்ததால் வேறு வழியின்றி தனுஷுக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்தார் ரஜினி.தற்போது அவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்தமகனுக்கு 17 வயது ஆகிறது.
திடீரென நேற்று இரவு 11 மணிக்கு நானும், ஐஸ்வர்யாவும் பிரிகிறோம் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் தனுஷ். நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் செல்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை இருவருக்கும் பிரச்சனை இருப்பதாக இதற்கு முன் எந்த செய்தியும் வெளியாகவில்லை. அப்படி இருக்க இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பது அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது.
இதையும் படிங்க: மனைவியை பிரிகிறேன்!… எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்த தனுஷ்…..
குறிப்பாக, தனுஷின் இந்த அறிவிப்பு இது ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இதனால் ரஜினியின்மனம் துயரமடையும் என்பது அவர்களின் பார்வையாக இருக்கிறது. ஏற்கனவே அவரின் இளையமகள் சௌந்தர்வா திருமணமாகி மகன் இருந்த நிலையில் விவகாரத்து பெற்றார். அதன்பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தனுஷும் தன் மனைவியை பிரிவதாக அறிவித்திருப்பது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, ‘தனுஷ்,அது உன் முடிவு. நீ அடைந்த உன் வளர்ச்சி உன்னாலே மட்டுமே வந்தது என நினைக்கிறே, அது இல்லை என எங்களை போன்ற தலைவரின் ரசிகர்களுக்கு தெரியும். நீ இனி பார்ப்பே உண்மையான தோல்விகளை. தலைவரை தலைகுனிய வைக்கும் எவனும் நல்ல இருந்ததில்லை.அதையும் பார்த்துக்கோ’ என ஒரு தீவிர ரஜினி ரசிகர் பதிவிட்டுள்ளார்.
மேலும் ‘ஒரு நல்ல மனிதனை மனவேதனைபடுத்தி வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை’ என ஒருவர் சாபம் விட்டுள்ளார்.
‘தான் செய்யாத தப்புக்காக இதுவரை தலைகுனியும் ஒரே ஜீவன் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள். பாவம் அவர் அந்த நல்ல மனிதனை எவ்வளவு தான் காயப்படுத்துவீர்கள்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
‘சிலருக்குக் கடவுள் எல்லாம் கொடுப்பார்..ஆனால் கடைசியில் கைவிட்டுவிடுவார்..-மகான் ரஜினி’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
‘தலைவர நெனச்சா தான் கவலையா இருக்கு.. இந்த 2 பெண் பிள்ளைகளுக்காக அவரால் முடிந்தவரை இறங்கி வந்துட்டார்.. தனுஷ் நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட’ என ஒருவர் சாபம் விட்டுள்ளார்.
இப்படி ரஜினி ரசிகர்கள் பலர் தனுஷுக்கு சாபம் விட்டு வருகின்றனர்.