ரயிலை நிப்பாட்டி மன்னிப்பு கேட்கவைத்த ரஜினி ரசிகர்கள்… திணறிப்போன வடிவுக்கரசி… அடப்பாவமே!!
1997 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரம்பா, சௌந்தர்யா, ரகுவரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அருணாச்சலம்”. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். மிகவும் சுவாரசியமான கதையம்சத்தை கொண்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இத்திரைப்படத்தில் வடிவுக்கரசி நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் அனாதை என தெரியவர வடிவுக்கரசி ரஜினிகாந்தை “அனாதை நாயே வெளியே போ” என திட்டுவார்.
இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியான பின்பு ஒரு நாள் வடிவுக்கரசி ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென ரயில் நின்றிருக்கிறது. சிறிது நேரம் கழித்து டிக்கெட் பரிசோதகர் வடிவுக்கரசியிடம் வந்து “நீங்கள் ரஜினியை திட்டினீர்களாமே” என கூறியிருக்கிறார்.
அதற்கு வடிவுக்கரசி “நான் எதுவும் திட்டவில்லையே” என கூறியிருக்கிறார். “அருணாச்சலம் திரைப்படத்தில் திட்டினீர்களாமே “ என பரிசோதகர் கேட்டிருக்கிறார். அதன் பின் “நீங்கள் மன்னிப்பு கேட்டால்தான் ரயிலை எடுக்கவிடுவோம் என்று கூறி சில ரஜினி ரசிகர்கள் தண்டவாளத்தில் படுத்துக்கிடக்கிறார்கள்” என கூறியிருக்கிறார்.
இதனை கேட்டு ஷாக் ஆன வடிவுக்கரசி ரயிலுக்கு வெளியே வந்து அந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் அதன் பின் “ரகுவரன் மட்டும் ரஜினிகாந்தை அடிக்கிறாரே” என துடுக்காக கேட்டுள்ளார்.
அதற்கு ரசிகர்கள் கோபமானார்களாம். உடனே வடிவுக்கரசி மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பின் தான் ரஜினி ரசிகர்கள் தண்டவாளத்தில் இருந்து எழுந்தார்களாம். இந்த சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவுக்கரசி பகிர்ந்துள்ள்ளார்.