ரஜினி இமேஜை காலி பண்ண போகும் லால் சலாம்!.. மகளுக்காக மாட்டிக்கொண்டு முழிக்கும் தலைவர்!..

by சிவா |
lal salaam
X

தமிழ் திரையுலகை பொறுத்தவரை பல வருடங்களாக சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினி மட்டுமே. அவரின் இடத்தை பிடிக்க பலரும் முயன்று தோற்று போனார்கள். எம்.ஜி.ஆருக்கு பின் அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ரஜினி மட்டுமே. சில படங்கள் சறுக்கினாலும் அடுத்த படத்தில் சூப்பர் ஹிட்டை கொடுத்துவிடுவார்.

தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் சமீபத்தில் வெளியான ஜெயிலர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. ரஜினி நடிப்பில் வெளியான எந்த படமும் இதுவரை இவ்வளவு வசூலை பெறவில்லை.

இதையும் படிங்க: கமல் செஞ்சா நானும் செய்யணுமா?!… ஒரு படத்தில் கூட ரஜினி செய்யாத ஒரு விஷயம்…

கமலுக்கு எப்படி விக்ரம் அமைந்ததோ அப்படி ரஜினிக்கு ஜெயிலர் அமைந்துவிட்டது. ரஜினி நடிப்பில் அடுத்து லால்சலாம் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ரஜினியின் இரண்டு மகள்களுக்கும் இயக்குனராக வெற்றிபெற வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.

குறிப்பாக அப்பாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருவருக்குமே இருக்கிறது. ஐஸ்வர்யா தொடர்ந்து அப்பாவை நச்சரித்து வந்தாலும் ஒரு முழு படத்தை அவரிடம் கொடுக்கும் அளவுக்கு ரஜினிக்கு இதுவரை நம்பிக்கை வரவில்லை.

அப்போதுதான் லால்சலாம் படக்கதையை கேட்டதும் அதில் வரும் ஒரு கேமியோ வேடத்தில் நானே நடிக்கிறேன் என சொல்லிவிட்டார். அதில் மம்முட்டி அல்லது மோகன்லாலை நடிக்க வைக்கலாம் என்பதுதான் ஐஸ்வர்யாவின் யோசனையாக இருந்துள்ளது. இப்படத்தில் ரஜினி நடித்து முடித்துவிட்டார்.

இதையும் படிங்க: விஜயை மட்டுமல்ல ரஜினியையுமே வச்சு செய்த பிரச்னை… அவரின் படத்துக்கே தடை உத்தரவு போட்ட பின்னணி!

தற்போது ஜெயிலர் பட வெற்றி ரஜினியை வசூல் மன்னன் என நிரூபித்ததோடு மட்டுமில்லாமல் ரஜினியின் இமேஜை மேலே உயர்த்தியுள்ளது. அடுத்தடுத்து பெரிய இயக்குனர்கள், பெரிய படங்கள் குறிப்பாக ஒருபடத்தின் முழு ஹீரோ என நடித்தால்தான் ரஜினி அதை தக்கவைத்து கொள்ள முடியும். மகளுக்காக நடித்துவிட்டோம். லால்சலாம் வெளியாகி ரசிகர்களை கவராமல் போய் மீண்டும் தனது கிராப் கீழே இறங்கிவிட்டால் என்ன செய்வது என இப்போது யோசித்து வருகிறாராம்.

இப்போது கூட எல்லோரும் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிக்கு நடிக்கபோகும் படத்தை பற்றித்தான் பேசுகிறார்களே தவிர, லால்சலாம் படம் பற்றி யாருமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தலையில துண்ட போட்டு போக வேண்டியதுதான்! ரஜினி, விஜயின் செயலால் கடுப்பான கோடம்பாக்கம்

Next Story