ரஜினி ஆசைப்பட்ட கமலின் சூப்பர் ஹிட் படம்!..கை நழுவி போனதால் இயக்குனரிடம் சண்டைக்கு நின்ன நம்ம சூப்பர் ஸ்டார்!..
தமிழ் சினிமாவில் இவரால் நகரத்து சம்பந்தமான கதைகளை எடுக்க முடியாது என்ற பல பேரின் கேளிக்கைகளுக்கு தக்க பதிலை கொடுத்த இயக்குனர் பாரதிராஜாவின் திகில் நிறைந்த படம் தான் சிகப்பு ரோஜாக்கள். முதல் இரண்டு படங்களான 16 வயதினலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்கள் கிராமத்து கதை.
சிகப்பு ரோஜாக்கள் படம் திகில் நிறைந்த காதல் சம்பந்த படம். இந்த படத்தில் நடிகர் கமல், நடிகை ஸ்ரீதேவி நடித்திருப்பர். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் கதையை நடிகர் ரஜினியிடமும் கூறியிருக்கிறார் பாரதிராஜா.
இதையும் படிங்க : அந்த நேரத்தில் நடிகையுடன் இருந்த அர்னாவ்!.. இத கண்டிப்பா பண்ணத்தான் போறேன்!..சீரியல் நடிகை திவ்யா கண்ணீர் மல்க பேட்டி!..
ரஜினிக்கு இந்த படத்தின் கதை மிகவும் பிடித்து போக நடிப்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ஆனால் என்னவோ கமலை ஓகே பண்ணிவிட்டார் பாரதிராஜா. இந்த செயல் அப்போது ரஜினிக்கு மிகவும் வருத்தத்தை தெரிவித்ததாக சித்ரா லட்சுமணன் தெரிவித்திருந்தார்.
இந்த வருத்தத்தை ஒரு நிகழ்ச்சியில் வெளிக்காட்டியிருக்கிறார் ரஜினி. பிரசாந்த் தந்தையும் நடிகருமான தியாகராஜன் ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருந்தாராம். அந்த விருந்தில் நடிகர் ரஜினி, பாரதிராஜா, இளையராஜா போன்றோர் கலந்து கொள்ள எதேச்சையாக சிகப்பு ரோஜாக்கள் படத்தை பற்றி ரஜினி பாரதிராஜாவிடம் பேச அது அப்படியே பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. எங்க ஒரு பெரிய சண்டையே வந்து விடுமோ என்று பயந்த மற்ற கலைஞர்கள் அவர்களை அப்படியே அழைத்துக் கொண்டு போய்விட்டனராம்.