இப்பதான் பாஷா..கபாலி!. ரஜினி டானாக நடித்த முதல் திரைப்படம் எது தெரியுமா?..
இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. பேருந்து நடத்துனராக வாழ்க்கையை துவங்கி நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். முறையாக நடிப்பு பயிற்சியும் எடுத்தார். பாலச்சந்தரின் கண்ணில் பட்டு அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். சிறிய வேடமென்றாலும் ‘யார் இந்த நடிகர்?’ என திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தார்.
அதன்பின் வில்லன், கதாநாயகனின் நண்பன் என சில படங்களில் நடித்து பைரைவி படம் மூலம் ஹீரோவாக மாறினார். அதன்பின் பல படங்கள். வசூல் சக்கரவர்த்தியாக மாறி பின்னர் சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் பாட்ஷா படம் அவரின் திரையுலகில் ஒரு மைல் கல் திரைப்படமாக இருக்கிறது. அப்படத்தில் டானாக சிறப்பான நடிப்பை ரஜினி வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல், பில்லா, கபாலி, பேட்ட ஆகிய படங்களிலும் டானாகவே நடித்திருந்தார்.
ஆனால், இந்த படங்களுக்கு முன்பே ரஜின் ஒரு படத்தில் டானாக நடித்துள்ளார். அதுவும் அவரை அறிமுகம் செய்த அவரின் குருநாதர் பாலச்சந்தரின் இயக்கத்தில் என்றால் நம்ப முடிகிறதா?.. ஆனால் அதுதான் உண்மை. பாலச்சந்தர் இயக்கிய தப்புதாளங்கள் படம்தான் ரஜினி டானாக நடித்த முதல் திரைப்படமாகும். இந்த படம் 1978ம் வருடம் வெளியானது. அதன்பின்னர்தான் பில்லா படத்தில் டானாக நடித்தார்.
ஆனால், பாட்ஷா திரைப்படம் ரஜினியை மாஸ் ஹீரோவாக மாற்றியது. அப்படத்திற்கு பின் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி படத்தில் சூப்பர் டானாக ரஜினி நடித்திருப்பார். இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி முடித்துள்ளார். அதேபோல், அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.