Cinema History
முதன் முதலில் ரஜினிக்காக கட் அவுட்!..எம்ஜிஆரை நினைத்து பயந்து என்ன செய்தார் தெரியுமா?..
தமிழ் சினிமாவின் கருப்பு வைரமாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரையே சேரும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார் ரஜினி.
அதன் பின் ஒரு சில படங்களில் வில்லனாகவே தோன்றியிருப்பார். அந்த காலங்களில் எம்ஜிஆரை வைத்து 15 படங்களுக்கும் மேல் எடுத்த சின்னப்பத்தேவரின் உதவியாளராக ஆஸ்தான கதாசிரியராக இருந்தவர் கலைஞானம். அவர் முதன் முதலில் ஒர் படத்தை தயாரிக்க பைரவி என்ற பெயரில் அந்த படம் தயாராகுகிறது.
77ல் ஆரம்பிக்கப்பட்ட பைரவி திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்குகிறார் ரஜினி. ஹீரோவா என பயந்து எம்ஜிஆர், சிவாஜி இவர்கள் எல்லாம் இருக்கும் போது நான் எப்படி ஹீரோ என தயங்கியே நடித்தாராம். படத்தில் ஹீரோயினாக நடிகை ஸ்ரீபிரியா நடித்தார்.
படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் திரைக்கு வந்தது. அப்போது கலைப்புலி எஸ். தாணு தியேட்டர் முன்பு ரஜினிக்கு ஒரு பெரிய கட் அவுட்டை வைத்து வியாபாரத்திற்காக ரஜினியின் புகைப்படத்திற்கு கீழே சூப்பர் ஸ்டார் என அச்சிடப்பட்டு வெளியிட்டார்.
இதை பார்த்ததும் பயந்து போன ரஜினி கலைஞானத்திடம் ஓடி வந்து என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? நான் வாட்டுல வில்லனா நடிச்சிட்டு போயிருப்பேன். இப்படி ஒரு கட் அவுட்டை வைத்து என் பொழப்புல மண்ணை அள்ளி போட்டீங்களே? என்று கேட்டாராம். ரஜினி இப்படி கேட்டதற்கு பின்னாடி இருந்த காரணம் அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர். ஏனெனில் அந்த சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் மிகவும் பிரபலமாக இருந்து கொண்டு இருந்த நேரம் அது. அதனால் தான் அப்படி கேட்டாராம் ரஜினி.