Connect with us
rajini

Cinema News

குடிமகன்களுக்கு ரஜினி சொன்ன சூப்பர் டிப்ஸ்! ஐய்யோ தலைவா பொசுக்குனு இப்படி சொல்லிட்டீங்க

நேற்று மிகவும் கோலாகலமாக  நடந்து முடிந்தது ஜெய்லர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. இணையம் முழுவதும் இதுதான் இப்பொழுது டிரெண்டாக போய்க் கொண்டிருக்கின்றது.அந்த அளவுக்கு விழாவில் பேசிய அனைவரும் மிகவும் சுவாரஸ்யமாக பேசியிருக்கின்றனர்.

குறிப்பாக கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக பேசிய ரஜினி அந்த ஒரு மணி நேரமும் மேடையை குதூகலமாக மாற்றியிருக்கிறார். ஒவ்வொருத்தரின் பேச்சும் ரசிகர்களை அந்தளவுக்கு ஈர்த்திருக்கிறது.இந்த நிலையில் ரஜினி அவர் பட்ட வேதனையை மேடையில் மிகவும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

rajini1

rajini1

அதாவது குடி ஒரு மனுஷனை எந்தளவுக்கு சீரழிக்கிறது என்பதை அவர் பட்ட அனுபவங்களில் இருந்து பேசியிருக்கிறார். மேலும்  ‘ நான் மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய இடத்தை அடைந்திருப்பேன்’ என்றும் ரஜினி கூறினார்.

இப்படி தன் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினி இப்படி ஒரு மேடையில் குடியை பற்றி பேசியது அனைவரின் மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏனெனில் குடியால் எத்தனையோ பேர் அவர்களின் குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. இதை ரஜினிமாதிரியான ஒரு நிலைமையில் இருக்கும் ஒரு நபர் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள் என்று சொல்கிறார்கள்.

rajini2

rajini2

அதோடு மட்டுமில்லாமல் குடிக்காமல் இருப்பதற்கும் ரஜினி சில டிப்ஸ்களை சொல்லியிருக்கிறாராம். ‘உங்களுக்கு குடிக்கனும் என்ற எண்ணம் வரும் போது உடனே வயிறு முட்ட சாப்பிட்டு தூங்கி விடுங்கள்’ என்ற டிப்ஸை சொன்னாராம். எப்பொழுதெல்லாம் குடிக்கனும் எண்ணம் வருதோ அப்பொழழுதெல்லாம் நல்லா சாப்பிட்டு தூங்கிவிடுங்கள் என்று சொன்னாராம்.

இதையும் படிங்க : சூப்பர்ஸ்டார் பட்டத்த வச்சிக்கிட்டு நான் படுற கஷ்டம் இருக்கே!.. மேடையில் புலம்பிய ரஜினி…

google news
Continue Reading

More in Cinema News

To Top