என் சந்தோஷம் எல்லாத்தையும் கெடுத்திட்டீங்க!.. பாலசந்தரிடம் சண்டையிட்ட ரஜினி!..
தமிழ் சினிமாவில் மாபெரும் ஒரு சக்தியாக உருவெடுத்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன்னரே கமல் ஒரு சூப்பர் ஹீரோவாக உருவெடுத்திருந்தார். சொல்லப்போனால் கமலை பார்த்து கொஞ்சம் தயங்கியதும் உண்டு ரஜினிக்கு.
இருந்தாலும் தன் கடின உழைப்பாலும் முயற்சியாலும் இன்று உச்சத்தை அடைந்திருக்கிறார் என்றால் முழு காரணம் கே.பாலசந்தர். பாலசந்தரின் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ரஜினி. ஆரம்பத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தவர் பைரவி படம் ஒரு ஹீரோ அந்தஸ்தை பெற்று தந்தது.
இதையும் படிங்க : தயாராகிறது கலைஞர் மு.கருணாநிதியின் பயோபிக்… டைரக்டர் யார்ன்னு தெரிஞ்சா ஷாக் அகிடுவீங்க!!
இருந்தாலும் திரையில் வில்லனாக ஜொலிக்க வேண்டும் என்பதே ரஜினியின் ஆசையாக இருந்ததாம். இன்று சூப்பர் ஸ்டாராக இருப்பது அவருக்கே ஆச்சரியத்தை தந்த விஷயமாகும். மேலும் ஆரம்பகாலங்களில் வில்லனாக நடித்து கிடைத்த சம்பளத்தில் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.
சொல்லப்போனால் சுதந்திரத்தை விரும்புவராக இருந்திருக்கிறார். யாருக்கும் எதற்காகவும் பயந்து வாழ்வதை விரும்பமாட்டாராம். ஆனால் எப்பொழுது ஒரு கமெர்ஷியல் ஹீரோவாக உயர்ந்தாரோ அப்பொழுதே அவரின் எல்லா ஆசைகளும் தவிடு பொடியாகிவிட்டது. நினைத்த நேரத்தில் வெளியே வர முடியவில்லை.
இதையும் படிங்க : அஜித்துக்கு ஆப்பு வைக்க போட்டி நடிகரின் ஆட்கள் போட்ட பிளான்!.. இவ்வளவு கிரிமினலா யோசிச்சிருக்காங்களேப்பா!.
யாரையும் சுதந்திரமாக போய் பார்க்க முடியவில்லை. நினைத்ததை விரும்பி வெளியே போய் சாப்பிட முடியவில்லை. இதெல்லாம் ரஜினிக்கு ஒரு வெறுப்பை உண்டாக்கியிருக்கிறதாம். இவருக்கு திருமணம் முடிந்த நேரத்தில் ஒரு சமயம் கே.பாலசந்தருக்கு லதா ரஜினிகாந்த் போன் செய்து உடனே வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்.
வந்து பார்த்தவருக்கும் ஒரே ஆச்சரியம். ஏனெனில் வீட்டில் இருக்கும் எல்லா புகைப்படங்களையும் ரஜினி கீழே போட்டு உடைத்திருக்கிறார். பாலசந்தர் புகைப்படம் மட்டும் அப்படியே இருந்ததாம். அதை பார்த்த பாலசந்தர் ‘ஏன் இதையும் போட்டு உடைக்க வேண்டியது தானே?’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ரஜினி ‘ ஏன் என்னை இப்படி பண்ணீங்க? என் சுதந்திரம் எல்லாம் பறிபோய் விட்டது. ’என்று பாலசந்தரிடம் கோபமாக கேட்டிருக்கிறார். அதற்கு பாலசந்தர் நீ இப்பொழுது தான் வளர்ந்து கொண்டு இருக்கிறாய், இன்னும் உன் வளர்ச்சி எங்கேயோ போக போகிறது என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன மாதிரி பாலசந்தரால் கூட ஒரு காலத்தில் ரஜினியை வைத்து படம் பண்ணாமல் போனதுதான். அந்த அளவுக்கு ரஜினி கமெர்ஷியல் கிங்காக மாறினார் என்பதே உண்மை.