ரஜினி அந்த விஷயத்துல டென்ஷனாகிடுவாரு...! சூட்டிங்கில் நடந்த சம்பவத்தை கூறிய சுந்தர்.சி
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாராக மட்டுமில்லாமல் ரசிகர்களின் தலைவராகவும் வைரலாகி வருகிறார். 80 களில் இருந்தே தன் பணியை ஆரம்பித்த ரஜினிகாந்த் இன்று வரை சற்றும் குறைவில்லாமல் செம்மையுற செய்து வருகிறார்.
அதே அழகு, ஸ்டைல் , நகைச்சுவை கலந்த நடிப்பு என ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார். அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை எனினும் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வயது 70 ஐ தாண்டினாலும் இன்னும் அதே சுறுசுறுப்புடன் இருக்கும் இவரை பற்றி பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி அருணாச்சலம் படத்தில் நடித்தார். படம் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்தது.
அந்த சமயம் தான் சுந்தர்.சி ரஜினியிடன் “ ஏன் சார், கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறீர்கள்? மேலும் திடீரென சூட்டிங் தடை பட்டாலோ அல்லது பாதியிலயே வேறு இடத்திற்கு மாற்றினாலோ ரஜினி மிகவும் டென்ஷனாகி விடுவாராம். ஒரு நேரத்தில் சூட்டிங் ஆரம்பித்தால் தொடர்ச்சியாக அதை முடித்துவிட வேண்டும் என நினைப்பாராம். இதை மனதில் கொண்டு சுந்தர்.சி கேட்க அதற்கு ரஜினி சூட்டிங் மாத்திரை போன்றது. கசப்பான கடினமான ஒன்று . கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டால் மிகவும் கடினமாக இருக்கும். கப் என்று குடித்து விட்டால் அவ்ளோதான் முடிந்து விடும்.அதே போல தான் சூட்டிங். ஒரே நேரத்தில் முடிந்தால் எல்லாருக்கும் நல்லது என கூறினாராம்.