மனைவி உயிருக்கு போராட 15 லட்சம் கொடுத்து உதவிய ரஜினி! ‘லால் சலாம்’ பட நடிகர் கண்ணீர் மல்க பேட்டி

by Rohini |
rajini
X

rajini

Actor Rajini: கோலிவுட்டில் பல ஆண்டுகளாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நடிகர் ரஜினி. 70களில் ஆரம்பித்த தனது பயணத்தை இன்று வரை வெற்றியோடு தொடர்ந்து கொண்டிருக்கிறார். 73 வயதை கடந்தாலும் ரஜினியின் ஸ்டைலும் சுறுசுறுப்பும் அப்படியேதான் இருக்கின்றது. விமான நிலையத்தில் அவரை பின் தொடரும் உதவியாளர்கள் ரஜினியின் பின் ஓடி வருவதைத்தான் பார்க்க முடியும்.

அந்தளவுக்கு வேகத்துடன் நடந்து செல்வார். இந்த வயதிலேயும் அவரின் வேகத்தில் ஒரு வேகம் என்று சொல்லலாம். சமீபத்தில் அம்பானி வீட்டு ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி குடும்பத்துடன் காட்சி கொடுத்தார். நமது நாட்டு பாரம்பரியத்துடன் தமிழ் நாட்டின் பெருமையை காப்பாற்றினார் ரஜினி. அது சம்பந்தமான பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இதையும் படிங்க:கோபி நீங்க பெரிய வில்லன் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க… ஆனா இது பக்கா காமெடியால இருக்கு!

ரஜினியை பற்றி பொதுவான பார்வை என்னவென்றால் அவர் ஒரு கஞ்சம். இதுவரை என்ன உதவிகளை செய்திருக்கிறார்? பணத்தை சேர்த்து சேர்த்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கிறார் என்றுதான் சொல்லி வருகிறார்கள். ஆனால் உண்மையிலேயே ரஜினி பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் என சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் உணர்த்தியிருக்கின்றது.

சுந்தரபுருஷன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். அவருடைய ப்ளஸே காமெடித்தனமான அந்த நடைதான். ஹீரோ மெட்டீரியல் இல்லை என்றாலும் அவர் ஹீரோவாக நடித்த நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்த நிலையில் லால் சலாம் படத்தில் லிவிங்ஸ்டன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த நேரத்தில் லிவிங்ஸ்டன் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாம்.

இதையும் படிங்க: மீனாவுக்கு கிடைத்த பலே ஆஃபர்!… இனிமே முத்து ஆட்டம் வேற லெவலில் இருக்க போகுதுப்பா…

இன்னும் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்றெல்லாம் மருத்துவர்கள் கூறி வந்த நிலையில் லிவிங்ஸ்டன் நிலையை அறிந்த ரஜினி அசால்ட்டாக 15 லட்சத்தை தூக்கிக் கொடுத்து இன்னும் தேவைப்பட்டாலும் கேள் என்று கூறி உதவிசெய்தாராம். ஆனால் லிவிங்ஸ்டனுக்கு ஏற்கனவே கடன் பிரச்சினை இருந்ததால் ரஜினியிடம் வாங்க சங்கோஜப்பட்டிருக்கிறார். என்னை ஒரு சகோதரனாக நினைத்து வாங்கிக் கொள் என ரஜினி கொடுத்தாராம்.

இன்று என் மனைவி உயிரோடு இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் ரஜினி தான் என்றும் அவர் புகைப்படத்தை என் வீட்டு பூஜையறையில் மாட்டி வழிபட்டு வருகிறேன் என்று லிவிங்ஸ்டன் கூறினார். அதுமட்டுமில்லாமல் இது போன்று பல உதவிகளை பப்ளிசிட்டி செய்யாமல் ரஜினி செய்து வருவதாகவும் ஒரு மருத்துவமனை கூட கட்டி வருகிறார் என்றும் லிவிங்ஸ்டன் கூறினார்.

இதையும் படிங்க: என்ஜாய் எஞ்சாமி பிரச்சனை!.. ஏ.ஆர். ரஹ்மானும் வசமாக சிக்கியிருக்கார்.. சந்தோஷ் நாராயணன் ஓப்பன்!..

Next Story