More
Categories: Cinema News latest news

ரஜினி கொடுத்த கிஃப்ட வாங்கலயே! அர்ஜூன் வீட்டு வரவேற்பில் நடந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ

Actor Rajini: இன்று அர்ஜுன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும் மற்றும் தம்பிராமையாவின் மகனும் நடிகருமான உமாபதிக்கும் சென்னையில் திருமண வரவேற்பு விழா நடந்து வருகிறது .அந்த விழாவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். ரஜினி, பிரபுதேவா, சசிகுமார், சினேகா, பிரசன்னா போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

அப்போது ரஜினி கொடுத்த கிஃப்ட்டை மணமக்கள் வாங்காதது போலவும் அதை ரஜினி என்ன செய்கிறார் என்பதுமான ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு ஆக்ஷன் கிங்காக 90களில் வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் நாட்டுப்பற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களாகவே அமைந்திருக்கின்றன.

இதையும் படிங்க: பழச மறக்காத வைகைப்புயல்.. டி.ராஜேந்தர் பற்றி வடிவேலு என்ன சொல்லியிருக்காரு பாருங்க

அதுபோக அவரும் அடிப்படையில் ஒரு நாட்டுப் பற்றுடையவராகவே இருப்பவர். அவருடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி தான். அதனாலோ என்னவோ அவருடைய ரத்தத்தில் அந்த நாட்டுப்பற்று ஊறி இருக்கிறது. இந்த நிலையில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் தம்பிராமையாவின் மகன் உமாபதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நடந்தது. அதன் பிறகு கடந்த 10ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் அர்ஜுனுக்கு சொந்தமான ஒரு இடத்தில் பிரம்மாண்ட செட்டு போட்டு நடைபெற்றது. அந்த திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: முதல்ல என்ன விரட்டி விட்டாங்க!. இப்ப கமலோட முத்தம்!.. நெகிழும் விஜய் சேதுபதி!…

இந்த நிலையில் இன்று அவர்களுடைய வரவேற்பு விழா சென்னையில் நடைபெறுகிறது. அதற்கு திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி வரும்போது கையுடன் ஒரு கிப்ட் கொண்டு வந்து இருந்தார். மேடையில் அந்த கிஃப்டை உமாபதியின் கையில் கொடுக்க அவர் வாங்கவில்லை.

உடனே ரஜினி அந்த கிப்ட்டை பின்னாடியில் வைத்தது போல அந்த வீடியோவில் இருக்கின்றது. பொதுவாக சினிமாவிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி பெரிய பெரிய வி.ஐ.பிக்கள் கொண்டு வரும் மலர் கொத்து கிப்ட் போன்றவைகளை வாங்குவதற்கு என மணமக்களுக்கு பின்னாடி சில ஆட்கள் நிற்பார்கள். அவர்கள் தான் வாங்கி அருகில் வைப்பார்கள். ஆனால் அப்படி ஒரு ஏற்பாடு இங்கு செய்யவில்லை போல. உடனே ரஜினி அந்த கிப்ட்டை அவரே பின்னாடி வைத்திருக்கிறார். அது பார்ப்பதற்கு வித்தியாசமாகவே தெரிகிறது .அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C8Oi-vhPhRW/?igsh=b2Fud29nOHR0bjVt

Published by
Rohini

Recent Posts